வாடிக்கையாளர்களின் கண்ணைக் கவருவதற்காக காய்கறிகளில்கூட, சாயத்தை ஊற்றி வண்ணமயமாக மாற்றி மொத்த வியாபாரிகள் ஏமாற்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் என அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்தான் விபாயாரிகள் இதனைச் செய்திருக்கிறார்கள். உணவுப் பாதுகாப்புத் துறையினரில் திடீர் சோதனை விதிகள் மீறப்பட்டிருப்பது அம்பலமானது.
ரகசியத் தகவல்
கோயம்பேடு சந்தையில், காய்கறிகளில் சாயம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காலையிலேயே கோயம்பேடு சந்தையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அம்பலம்
இதில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 16 கடைகளில் இருந்து, 400 கிலோ பச்சை பட்டாணி, 50 பட்டர் பீன்ஸ், 100 கலர் அப்பளம், 2 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 16 கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, தலா 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை, சிறிய குடோன்களில் வைத்து நிறமேற்றி, சந்தையில் விற்பனை செய்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புற்றுநோய் இலவசம்
இதில் சேர்க்கப்படும், 'மேலகைட் கிரீன்' உள்ளிட்ட ரசாயனங்கள், குழந்தைகள் முதல் பெரியோர் வரை என, அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் அதிகாரிகள் வழக்கமாக இந்தச் சோதனைகளை மேற்கொள்வது, தவறு செய்யும் வியாபாரிகளும் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்பதாக அமையும்.
மேலும் படிக்க...
அக்ரி கிளினிக் தொடங்க ரூ.1லட்சம் மானியம்- அருமையான வாய்ப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் கார்த்திக்!