நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2023 4:49 PM IST
Vi SmartAgri project

முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான Vi ஆனது IoT சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் 12 மாநிலங்களில் கிராமப்புற வருமானத்தை அதிகரிக்கவும், பண்ணை உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

Vi நிறுவனமானது, SmartAgri திட்டத்தின் மூலம், ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வேளாண் பணிக்கான உள்ளீடு செலவுகளைக் குறைக்கவும் ஸ்மார்ட் விவசாய தீர்வுகளை உருவாக்கி வருகிறது. களத்தில் விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் நேரிடையாக கலந்துரையாடி, அவர்கள் வழங்கு உள்ளீடுகளை கொண்டு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வோடபோன் ஐடியாவின் தலைமை ஒழுங்குமுறை மற்றும் கார்ப்பரேட் விவகார அதிகாரியான பி.பாலாஜி இதுக்குறித்து தெரிவிக்கையில் "IoT சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்தி, விவசாய நடைமுறைகளை மாற்றியமைக்கவும், வேளாண் பணிகளை எளிமையாக்கவும் மற்றும் விவசாய விளைப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய பசுமைப் புரட்சியை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்," என்றார்.

2019-20 ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட SmartAgri திட்டம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா என 12 மாநிலங்களில் இப்போது செயலில் உள்ளது. சோயாபீன், பருத்தி, தேயிலை, கடுகு, கரும்பு போன்ற பயிர்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமான சிறு குறு விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

”SmartAgri திட்டத்தின் வாயிலாக, விளைச்சலில் காணக்கூடிய உயர்வானது பயிர் வகையைப் பொறுத்து விவசாயிகளின் வருமானத்தை 70% அதிகரிக்க உதவியதாகவும், உள்ளீடு செலவுகளில் 23% வரை குறைக்க உதவியதாகவும்” வோடபோன் ஐடியாவின் கார்ப்பரேட் விவகார அதிகாரி பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை- ஆண்டுக்கு 25 கோடி வருமானம்!

கணிக்க முடியாத வானிலை, காலநிலை மாற்றம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகச் சார்ந்திருப்பது போன்ற சவால்களை விவசாயிகள் எதிர்கொள்வதற்கு, வயல் முகவர்களால் விவசாயிகளுக்கு பயிற்சியும், தொழில்நுட்ப ஆதரவும் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக, IoT சென்சார் தொழில்நுட்பம், மண் மற்றும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள், காற்றின் வலிமை மற்றும் திசை, பூச்சி தாக்குதல் மற்றும் பூச்சிகளின் இருப்பு மற்றும் பயிர் வளர்ச்சி வரை அனைத்திலும் நிகழ்நேர தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

வேளாண் விஞ்ஞானிகள், களப் பயிற்சியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலர்கள் போன்ற முன்னணி நிபுணர்களின் தரவுகளின் அடிப்படையில் சரியான ஆலோசனையைப் பெற விவசாயிகளுக்கு இது உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: குதிரைவாலி முதல் அகத்திவிதை வரை- ஒரே நாளில் 10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம்!

English Summary: Vi SmartAgri project uses IoT and AI to modernise agricultural practices
Published on: 28 December 2023, 04:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now