பல்வேறு சிறு தொழிலிலும், கிளைத்தொழில்களும் ஒன்று சேர்ந்த விவசாயத்தில் குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் சம்பாதிக்க முடியும். எனவே தான் பலரும் விவசாயம் சார்ந்த தொழில்களை தற்போது துவங்க திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் குறைந்த முதலீடு, குறைந்த இட வசதி உள்ளிட்டவைகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வேளாண் சார்ந்த தொழில்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
இதன் மூலம் உங்கள் சுற்றத்தார்களிடம் உங்களின் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம்.
கால்நடை தீவன உற்பத்தி - Livestock feed Business
கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு தொழில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கால்நடைகளின் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்திக்கும், அதிக பால் சுரப்பதற்கும் என்று பல்வேறு தீவனங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்கான பயிற்சிகள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அப்பயிற்சியைப் பெற்றவர்கள் தீவன தயாரிப்பு தொழிலில் ஈடுபடலாம்.
வண்ண மீன் வளர்ப்பு - Colour fish farming
வண்ண மீன்களை வளர்ப்பதற்கான சீதோஷ்ண நிலை தமிழகம் முழுவதும் நன்கு உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் வண்ண மீன்களில் உள்ளன. குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும் ஒரு சென்ட் இடமும் போதுமானது. பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் இது. குறைவான உழைப்பே போதுமானது. காலையில் 2 மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் என ஒரு நாளைக்கு 4 மணி நேரம் உழைத்தால் போதும். குறைந்த பட்சம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் - Value added business
விளை பொருட்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு பெரும்பாலும் லாபம் கிடைப்பது இல்லை. ஆனால் அதையே மதிப்புக்கூட்டு செய்து விவசாயிகள் விற்பனை செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். குறைந்த முதலீடு மூலமும் சில பயிற்சிகள் மூலமும் விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டு தொழிலை துவங்கி அதில் லாபம் பெறலாம். இதற்காக ஆலோசனைகளை உங்கள் பகுதி வேளாண் துறை அதிகாரிகளிடம் பெறலாம்.
நர்சரி கார்டன் - Nursery Graden Business
செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு இந்த நர்சரி கார்டன் தொழிலை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம். வருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு கொஞ்சம் இட வசதி தேவைப்படும். உங்களுக்கு தோட்டம் தொடர்பான ஈடுபாடு இருந்தால் இதில் நல்ல லாபம் பார்கலாம்
ஒருக்கிணைந்த பண்ணை - Integrated farming
ஆடு, மாடு , கோழி, மட்டுமின்றி குறுகிய கால மரம், நீண்ட கால மரம், பழ மரங்கள் கொண்டு இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கலாம், இதன் மூலம் தினம் வருமானம், மாத வருமானம், ஆண்டு வருமானம் என்று திட்டமிடுவதன் மூலம் நல்ல லாபம் பார்க்கமுடியும். கொஞ்சகாலம் பொருமையாக காந்திருந்தால் ஆயுள் முழுமைக்கும் நிம்மதியாய் லாபம் சம்பாதிக்கலாம்.
ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க!
மேலும் படிக்க...
ஜீரோ பட்ஜெட் கீரை சாகுபடி : மாதம் ரூ.1லட்சம் லாபம் சம்பாதிக்கும் இயற்கை விவசாயி நாராயண ரெட்டி!