தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இயற்கை வேளாண்மை எனப்படும் அங்கக வேளாண்மையில் ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்துகொண்டு, தொழில் முனைவோராக உருவாகலாம்.
முக்கியத்துவம்
வேளாண்மையில் இயற்கை வேளாண்மை, ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் வேளாண்மை என சில வகைகள் உண்டு. வணிக ரீதியிலான லாபத்தைக் கருத்தில்கொண்டு, இன்று பெருமளவில் ரசாயன வேளாண்மை அதிகரித்து வருகிறது. இருந்தாலும், இந்தியாவில் பாரம்பரிய வேளாண்மை என்றால், அது இயற்கை வேளாண்மைதான்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் நேரடியாக (Direct Mode) அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 07.06.2022 அன்று நடத்தப்பட உள்ளது.
அதாவது, செவ்வாய்க்கிழமை காலை 9.30 - 1.00 மற்றும் 2.00 - 5.30 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில்,
-
இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை
-
களை மேலாண்மை
-
இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல்
-
இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
-
அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களில் உறுதியளிப்புத் திட்டம்
உள்ளிட்டத் தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளது.
கட்டணம்
இப்பயிற்சிக்குக் கட்டணமாக ரூ. 590/- மட்டும் வசூலிக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களைப் பெற,பேராசிரியர் மற்றும் தலைவர், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், organic@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும்,
மற்றும் 0422 6611206 / 0422 2455055 என்றத் தொலைப்பேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...