Farm Info

Tuesday, 01 February 2022 10:47 AM , by: Elavarse Sivakumar

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், அங்க வேளாண்மைக் குறித்த ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி நடைபெறும் இந்தப் பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டுப் பயனடையலாம்.

இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் என்றால், அது அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயம்தான். இதைத்தான் இயற்கையை வணங்கி வேலையைத் தொடங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் செய்தார்.

காலப்போக்கில் வணிகமயமாக்கல் காரணமாகவும், குறைந்த காலத்தில் அதிக மகசூலும், லாபமும் ஈட்ட வேண்டும் என குறுகலான எண்ணத்தினால்தான் ரசாயன விவசாயம் காலூன்றியது.
மண்ணுக்கும், மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்காத விவசாயம் என்றால் அது, இயற்கை விவசாயம்தான்.

இந்த உண்மையை இன்று பல்வேறுப்பிரிவினரும் உணர ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீடித்த வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. இணையவழியில் நடைபெறும் இந்த அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 07.02.2022 திங்கள் கிழமை அன்று காலை 9.30 - 1.00 மற்றும் 2.00 - 4.30 வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில்,

  • இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை

  • களை மேலாண்மை இயற்கை உரம்

  • பூச்சி விரட்டி தயாரித்தல்

  • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு

  • அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின்

    உறுதியளிப்புத் திட்டம்

போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சிக்கட்டணம்

இதற்கான பயிற்சிக்கட்டணம் ரூ 590/-

செலுத்தும் வங்கி விவரம்

பேராசிரியர் மற்றும் தலைவர்,

State Bank of Indin,

TNAU Branch

Account Number. 38918523789,

IFSC Code SBIN0002274

மேற்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயிற்சியின் முடியில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மின்னஞ்சல் மற்றும் முகலவரியை பின்கோடுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.

பேராசிரியர் மற்றும் தலைவர்

வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் 641 003.

மின்னஞ்சல் : organicotmaacin

தொலைப்பேசி: 0422 6611206 / 0422 2455055

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)