பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 September, 2022 7:14 AM IST

அங்கக வேளாண்மை செய்து, தொழில் தொடங்கி நீங்களும் இயற்கை விவசாயியாகி தொழில் முனைவோராக மாறுவதற்கு ஆசையா? உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்புக் காத்திருக்கிறது. தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அங்கக வேளாண்மை குறித்த நேரடி பயிற்சி இன்று நடத்தப்பட உள்ளது.

வேளாண் படிப்பு (Agricultural Studies)

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.

தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)

சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.

வழிகாட்டுதல்

இதன் ஒருபகுதியாக, இயற்கை விவசாயத்தைக் கையில்எடுத்து, தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி இன்றியமையாதது. இங்கு இயங்கும், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், மனித குலத்திற்கும் தீங்கு விளைவிக்காத அங்ககவேளாண்மையில் விளைவித்த விளைபொருட்களுக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. எனவே இது சார்ந்த தொழிலுக்கு அதிக எதிர்காலம் காத்திருக்கிறது.

பயிற்சி (training)

எனவே இது தொடர்பாக தொழில்முனைவோராக விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில், அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட உள்ளது.
காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ள பயிற்சி முகாமில், குறிப்பாக 6 தலைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

சிறப்பு அம்சங்கள்

அதாவது இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக ஒரு நபரக்கு ரூ.590 வசூலிக்கப்படுகிறது..

பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி தொழில் முனைவோராக விரும்புவோர், தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்- 641003 என்ற முகவரியிலும், organic@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும், 0422- 6611206 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Want to become a business owner? - TNAU offers opportunity!
Published on: 07 September 2022, 07:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now