பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 March, 2022 11:53 AM IST

ஈரோட்டில் உள்ள Myrada வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த 2 நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியேத் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டியதுக் கட்டாயம். அவ்வாறு முன்பதிவு செய்வதற்கு மார்ச் 5ம் தேதி வரை காலக்கெடுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் Myrada வேளாண் அறிவியல் நிலையம், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வேளாண்மை மீது விருப்பம் உள்ளவர்களை தொழில் முனைவோராக மாற்ற முன்வந்துள்ளது. இதற்காக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த 2 நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பயிற்சி முகாம்

மார்ச் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படு கிறது. இதில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி முகாமில், உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

பயிற்சி முகாமில், ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்க வரி கணக்கிடல், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள் போன்றவை குறித்துத் தெளிவாக விளக்கம் அளிக்கப்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் அனைவரும் சேரலாம்.

இந்தப் பயிற்சி முகாம் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்கூட்டியேத் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டியதுக் கட்டாயம். அவ்வாறு முன்பதிவு செய்வதற்கு மார்ச் 5ம் தேதி வரை காலக்கெடுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் வரும் 5ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

உடனே உங்கள் எடைக் குறையும்- இதுதான் அந்த மந்திரம்!

English Summary: Want to become a business tycoon? Myrada KVK offers a rare opportunity!
Published on: 01 March 2022, 11:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now