கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த 5 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. அந்த வாய்ப்பை, விவசாயிகள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பெண்கள், தொழில்முனைவோர் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண் படிப்பு (Agricultural Studies)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)
சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.
பயிற்சி (training)
அந்த வகையில், பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் 5 நாள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்படும் இந்தப் பயிற்சி முகாமில், வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த அனைத்துத் தகவல்களும், ஒருங்கிணைத்து வழங்கப்படும்.
கட்டணம்
எனவே இந்தப் பயிற்சிக்குக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.10,000 +GST ரூ.1800ம் சேர்த்து ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளது. எனவே பதவுக்கு busieness@tnau.ac.in , eximabdtnau@gmail.com மற்றும்
0422 – 6611310,9500476626 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...