Farm Info

Saturday, 02 January 2021 09:28 PM , by: KJ Staff

Credit : Siru Tholhil ideas

பாரம்பரியத்தை விரும்புபவர்கள் நாட்டுக்கோழியின் ருசியை சிலாகித்து பேசுவர். இயற்கையாக கிடைக்கும் நாட்டுக்கோழிகள் என்றுமே அதிக சுவை கொண்டதுடன், உடலுக்கும் மிக ஏற்றது.

இயற்கை உணவுகள்:

புறக்கடையில் நாட்டுக்கோழிகள் மேயும் போது பசும்புல் போன்ற தீவனத்துடன், மண்ணில் உள்ள கழிவுகளையும் (Wastages) கிளறி உண்கின்றன. இதனால் இவற்றின் இறைச்சி ருசியாகவும், மணமாகவும் இருக்கிறது. இயற்கையாகவே நாட்டுக் கோழிகளின் திசுக்கள் (Tissues) மிருதுவாக இருப்பதும் ஒரு காரணம். நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கு அரசு மானியம் வழங்குவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மானிய விலையில் நாட்டுக்கோழி குஞ்சுகளும் வழங்கப்படுகிறது.

எளிய தொழில்:

கிராமப்புற பெண்களுக்கு எளிய வருமானம் (Simple income) தரும் தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளது. தேவைக்கேற்ப அவ்வப்போது கோழிகளை விற்று பணம் சம்பாதிக்கின்றனர். இவற்றுக்கு வெள்ளை கழிச்சல் நோய் (White diarrhea disease) மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்டால் பாதியளவு கோழிகள் இறந்துவிடும். நோய் வந்தபின் காப்பாற்றுவது கடினம் என்பதால், நோய் வரும் முன்பே இவற்றுக்கு தடுப்பூசி (Vaccine) போட்டு காப்பாற்ற வேண்டும். அரசு கால்நடையின் அனைத்து மையங்களிலும் சனிக்கிழமை தோறும் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி இலவசமாக (Free Vaccine) போடப்படுகிறது. குஞ்சுகளை வாங்கிய 30 முதல் 60 நாட்களுக்குள் இலவச தடுப்பூசி போட்டுக் கொண்டால் வருமான இழப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

ராஜேந்திரன்
இணை இயக்குனர் ஓய்வு
கால்நடை துறை,
திண்டுக்கல் 73580 98090.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)