Farm Info

Wednesday, 02 December 2020 04:23 PM , by: Daisy Rose Mary

தமிழகத்தில் பருவ மழையைத் தொடர்ந்து சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளன. விதைக்கும் முன்பே விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூர் ஈட்டலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

வட கிழக்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் சாகுபடி பணிகளும் தீவிரமடைந்துள்ளது. அடுத்தகட்டமாக விதைப்புக்கு தயாராகும் விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். விதைக்கும் முன்பு, உரச்செலவை குறைக்கும் வகையில், விதை நேர்த்தி செய்து நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்றும், லாபமும் அதிகரிக்கும் என்றும் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

  • பயிர்களை, விதை மூலம் பரவக்கூடிய, பூஞ்சாண நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு, விதையுடன் பூஞ்சாண மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

  • விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலை கருகல், இலை உறை அழுகல், குலை நோய் போன்ற பூஞ்சாண நோய்களை தடுக்க, ஒரு கிலோ விதைக்கு, இரண்டு கிராம் வீதம், கார்பன்டைசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, பின் விதைக்க வேண்டும்.

  • நெல், சிறுதானியம், பருத்தி, கரும்பு, எள், சூரியகாந்தி பயிர்களுக்கு, விதை நேர்த்தி செய்வதற்கு, ஒரு ஏக்கர் விதைக்கு அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் ஆறிய வடிகஞ்சியில் கலந்து, அத்துடன் பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில், 30 நிமிடம் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.

  • நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு, விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு ஏக்கர் விதைக்கு, 'ரைசோபியம்கல்சர்' ஒரு பாக்கெட்டை, ஆறிய வடிகஞ்சியில் கலந்து, அத்துடன் பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதையை கலந்து, நிழலில், 30 நிமிடம் உலர்த்தி, பின் விதைக்க வேண்டும்.

 


உயிர் உர விதை நேர்த்தி செய்வதால், உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து, பயிருக்கு கொடுக்கும். இதனால், இளம் பயிரின் இலைகள், கரும்பச்சை நிறத்துடன் செழிப்பாக வளரும். பயிர்கள் கூடுதல் மகசூல் கொடுக்கும். இதன் மூலம், கால் பங்கு, தழைச்சத்து இடுவதை குறைக்கலாம்; அதன் மூலம், உரச்செலவு குறையும். எனவே, விவசாயிகள் பூஞ்சாணக் கொல்லி விதை நேர்த்தி செய்து, பயிர்களை நோய்களில் இருந்து வருமுன் காக்க வேண்டும்.

மேலும் படிக்க...

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!

நிவர் புயல் தாக்குதலால் நீரில் முழ்கிய 9,400 ஹெக்டேர் பயிர்கள் - மீட்கும் முயற்சியில் அதிகாரிகள்!!

”தமிழக மீன்’’ அங்கீகாரம் பெறும் "அயிரை மீன்” !!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)