பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில் இலைச்சுட்டுப் புழுக்க மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்தப் புழுக்களை பல்வேறு இயற்கை மருந்துகளைப் (Natural Medicine) பயன்படுத்தி துவம்சம் செய்யலாம்.
இயற்கை மருந்துகளின் பட்டியல் இதோ!
-
சிறியாநங்கை கஷாயம் 3 முதல் 5 %, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 9சதவீதம் வேப்ப விதைக் கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
-
வேப்பஇலைக் கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
-
வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகயவற்றை 160 லிட்டர் தண்ணீல் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
-
300 முதல் 500 கிராம் வேப்பங்கொட்டைத் தூளை, 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேர த்திற்கு ஊறவைத்து வடிக்க வேண்டும்.
-
அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தெளிக்க வேண்டும்.
-
10 கிலோ வேப்பஇலையை விழுது போல் அரைத்து, அதனை ஒரு லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
-
இலந்தை மரக்கிளையால் பிணை இலைகளை உரசி மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம்.
-
இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
-
4 சதவீதம் வேப்பஎண்ணெய்யைத் தெளிக்கலாம்
-
சோற்றுக் கற்றாழைச் சாற்றைத் தெளியலாம்
-
300 மில்லி வேப்ப எண்ணெய் 300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
-
சாம்பல் தூவலாம்.
-
விளக்குப் பொளிகளை வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
PM-Kissan முறைகேடு - 130 கோடி பறிமுதல்!
2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!
யாரெல்லாம் காளானை சாப்பிடக்கூடாது?