சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 November, 2023 12:42 PM IST
value added papaya fruit
value added papaya fruit

பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த அதிக சத்து மற்றும் மருத்துவ குணங்களையுடைய பழமாகும். மேலும் பப்பாளி அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த பயிராகும். மேலும் பப்பாளியினை மதிப்புக்கூட்டல் முறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.

நெடுங்காலமாக உஷ்ண பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களுடைய வீட்டுத் தோட்டங்களில் வருடம் முழுவதும் பப்பாளியை பயிரிட்டு வந்துள்ளனர். பப்பாளி வருட முழுவதும் பலன் தரக்கூடிய எந்த மண்ணிலும் எந்த தட்ப வெப்பநிலைகளிலும் வளரக் கூடிய பயிராகும். வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட இப்பயிரானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பழப்பண்ணைகளில் பயிரிடப்படுகிறது. ஏனென்றால் இது அதிக மகசூல் கொடுக்க கூடியதாகவும் வாழைப்பழத்திற்கு அடுத்த படியாக அதிக வரமானம் ஈட்டக் கூடியதாகும். மதிப்புக்கூட்டு முறையில் பப்பாளி ஊறுகாய், பப்பாளி (டூட்டி புரூட்டி) செய்யும் முறைகள் பின்வருமாறு-

பப்பாளி ஊறுகாய்

  • பப்பாளி காய் துருவியது-1 கிலோ
  • உப்பு-10 கிராம்
  • மிளகாய்த் தூள்-20 கிராம்
  • மஞ்சள் தூள்-5 கிராம்
  • பெருங்காயம்-5 கிராம்
  • வெந்தயம்-20 கிராம்
  • சீரகம்-30 கிராம்
  • கடுகு-10 கிராம்
  • நல்லெண்ணைய்-500 மி.லி.
  • வினிகர்-50 மி.லி.

செய்முறை

  • பப்பாளி காயை நன்கு கழுவி/ தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையை ஊற்றி நன்கு சூடானதும் கடுகு போட்டு தாளித்து துருவிய பப்பாளி காயை நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன் உப்பு/ மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  • எண்ணையைப் பிரிந்து வரும் போது லேசாக வறுத்து பொடித்து வைத்துள்ள கடுகு/ பெருங்காயம்/ சீரகப் தூள் மற்றும் வெந்தயத் தூளைப்போட்டு கிளறி கடைசியாக வினிகர் சேர்த்து நன்றாக கிளறி ஊறுகாய் ஆறியவுடன் சுத்தம் செய்த கண்ணாடி குப்பிகளில் காற்று புகா வண்ணம் அடைத்து பயன்படுத்தலாம்.

பப்பாளி  (டூட்டி புரூட்டி)

  • பப்பாளி காய்-200 கிராம்
  • சர்க்கரை-140 கிராம்
  • தண்ணீர்-60 மிலி
  • கால்சியம் குளோரைடு-2 கிராம்

செய்முறை

  • இதனைச் செய்ய நன்றாக முதிர்ச்சியடைந்த பப்பாளிக் காய்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • காயைக் கீறி பாலை வடித்துவிட்டு பின் காயை நன்றாக கழுவி தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு/ சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • இதனை மூன்று நிமிடம் நீராவியில் வேகவைக்கவும்.
  • பின்பு இதனை குளிர்ந்த நீரில் கழுவி மறுபடியும் கால்சியம் குளோரைடு கரைசலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  • சர்க்கரை கரைசல் தயார் செய்து பின்பு துண்டுகளை 1 ½ மணிநேரம் ஊறவைத்து பின்பு இதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
  • பல நிறங்கள் கொண்ட பப்பாளித் துண்டுகள் தயாரிப்பதற்கு சூடான பாகை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிறப்பொடி சேர்த்து துண்டுகளை அதனுள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பின்பு பாகை வடித்து விட்டு துண்டுகளை நிழலில் உலரவைக்கவும். உலர்ந்த துண்டுகளைப் பாலிதீன் பைகளில் சேமித்து வைக்கவும்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் முனைவர் ஜெ.செல்வி, முனைவர் இ.சுப்பிரமணியன், முனைவர் லூ.நிர்மலா மற்றும் முனைவர் செ.சரவணன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கொடுவா மீன்வளர்ப்பு பணிக்கு 60 % வரை மானியம்- ஆட்சியர் அறிவிப்பு

English Summary: Ways to see money in value added papaya fruit
Published on: 28 November 2023, 12:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now