விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கலப்பு இருக்கக்கூடாது. கலவன்கள் தான் இனத்துாய்மையை கெடுக்கும் முக்கிய காரணி. இந்த கலவன்கள் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்பையும் உருவாக்குகின்றன.
இனத்துாய்மை பாதுகாப்பு
பூ பூக்கும் முன்னர், விதைப்பயிர்களில் செடிகளின் உயரத்தைக் கொண்டு முதலில் அளவிட வேண்டும். உயரமான செடிகள் மற்றும் குட்டையான செடிகளை இனம் காண வேண்டும். பயிர்களின் தண்டின் நீளத்தில் மாறுபட்ட செடிகள் , முந்திக்கொண்டு பூக்கும் செடிகளை கண்டறிந்து நீக்க வேண்டும். செடிகளில் பூ பூக்கும் மற்றும் அறுவடைக்கு (Harvest) முன்னர் பூவின் நிறம், காய்களின் வடிவமைப்பில் மாறுபட்டிருக்கும் கலப்பு ரகங்களையும் கண்டறிந்து அகற்ற வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமே பயிர்களின் இனத்துாய்மையை பராமரிக்க முடியும்.
அவசியம்
இனத்தூய்மை செய்வதின் மூலம், கலப்பினங்களை அகற்றி மகசூலை அதிகரிக்க முடியும். மேலும் தரமான விளைச்சலை விவசாயிகளால் பெற முடியும் என்பதால் இனத்தூய்மை அவசியமான ஒன்றாகும்.
என்.வேணுதேவன், ஆராய்ச்சி வல்லுனர்
ஸ்ரீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை
மேலும் படிக்க
நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!