இந்த ஆண்டு வாழைப்பழத்திற்கு என்ன விலை கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
தமிழகம் முதலிடம் (Tamil Nadu tops the list)
இந்தியாவில், வடகிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வாழை சாகுபடியில் தமிழ்நாடு அதிக பரப்பளவு மற்றும் உற்பத்தியைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
வாழை சாகுபடி (Banana cultivation)
தமிழ்நாட்டில் ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. கோவை, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை பயிரிடப்படும் நேந்திரன் வாழையானது கேரள சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.
சந்தைகள் நிலவரம்
கேரள மக்களின் உணவு மற்றும் சீவல் தயாரிப்பில் நேந்திரன் வாழையானது முக்கிய பங்கு வகிக்கிறது. திருச்சி சந்தைக்கு வாழை வரத்து லால்குடி, புதுக்கோட்டை, முசிறி, கடலூர் மற்றும் தேனி ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது. கோயம்புத்தூர் சந்தைக்கு புதுக்கோட்டை, திருக் காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது.
சந்தை ஆய்வு (Market research)
வர்த்தக மூலங்களின் படி, பண்டிகை காலங்கள் காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவை அதிகரிக்கக் கூடும். இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், விவசாய மேம்பாட்டுத் திட்டம் உதவி வருகிறது.
இந்த விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
என்ன விலை? (What price?)
ஆய்வின் முடிவின், அடிப்படையில் அக்டோபர் முதல் டிசம்பர் 2021 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.15.
கற்பூரவள்ளி ரூ. 25 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.32 வரை இருக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003, தொலைபேசி : 0422-2431405 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
தொழில் நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பழப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003, தொலைபேசி எண்: 0422 6611269 தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
80 - 85 % வரை மானியம் கிடைக்கும் தொழில்- ரூ.5 லட்சம் வரை வருமானம்!
வேலையற்ற இளைஞர்கள் பால் பண்ணைகள் திறக்க மானியம் வழங்கும் அரசு!