இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், அந்த விவசாயத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்பவை எதுவென்று தெரியுமா? அவைதான் தேனீக்கள். உண்மையில் தோட்டத்தின் இயற்கை தேவதைகள்தான் இவை.
வேளாண் பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற முழு காரணம் தேனீக்கள் தான்(Bees). தேனீக்களின் உணவு மலரில் உள்ள மதுவும் மகரந்தமும் தான். தேனீக்களின் வாழ்க்கை கூட்டுக்குடும்பம் வாழ்க்கையாகும். தேன் கூட்டில் ஓரே ஒரு ராணித்தேனி 10/ சதவிகிதம் ஆண்தேனீ மற்றும் 90/- சதவிகிதம் வேலைக் கார தேனீக்கள் இருக்கும்.
பொதுவாக உலகில் அதிக அளவில் அறியப்பட்ட இனம் பூச்சி இவைதான். மனிதனுக்கும், விவசாயத்திற்கும்,பாதிப்பு ஏற்படுத்த பல பூச்சியினங்கள் உள்ள நிலையில், மனிதனுக்கும் விவசாயத்திற்கும் நன்மை பயக்கும் இனம் என்றால், அவை தேனீக்கள் தான்.
பூர்வீகம் (Native)
ஆப்பிரிக்காவின் தோன்றி, தற்போது உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழுகின்ற இனம் தேனீக்கள். பனிபிரதேசத்தில் மட்டும் இல்லை. ஒவ்வொரு ஆண் மலரில் உள்ள மகரந்தத்தை எடுத்து பெண் மலரில் உள்ள சூல் முடியில், கொட்டுவதால் விளைகின்ற விளைபொருள், மகசூல் என்று பெயர் வந்தது.
தேனீக்களின் குணாதிசயம் (Character)
-
தேனிக்களுக்கு 3000 நாசிதூவாரங்கள் உள்ளன
-
இருப்பதால் 2கிமி சுற்றளவில் உள்ள பூக்களின் வாசத்தை நுகரும்
-
கருப்பு,சிவப்பு நிற மலர்கள் பிடிக்காது
-
நச்சுமலர்களிலிருந்து தேன் எடுக்காது
-
ஆரளி போன்ற மலர்கள் இருந்து எடுக்காது
-
மலைப் பகுதியில் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் தடுக்க தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன.
-
தேனீக்களின் ரீங்கார சப்தம் யானைகளுக்கு பிடிக்காது
-
எனவேதான், காபி மற்றும் ஏலக்காய் ஸ்டேட் பகுதியில் அதிக அளவில் தேனிக்கள் வளர்க்கப்பட்டு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
-
தேனீக்கள் தங்கள் நடன அசைவுகள் முலம் மற்ற தேனீக்களுக்கு பூக்கள் இருப்பிடத்தை தெரிவிக்கின்றன.
-
எனவே பயிர் விளைச்சலில் அதிக மகசூல் பெற்றிட தேனீ வளர்ப்பில் நாம் தீவிரம் காட்ட முன்வர வேண்டும்.
மகசூலுக்கு உதவும் (Help Yield)
வேளாண் பயிர்களான சோளம், கம்பு,மக்காச்சோளம்,எள், துவரை, சூரிய காந்தி,கடுகு,பருத்தி, இரப்பர் மற்றும் தென்னை போன்ற பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற தேனீக்கள் உதவுகின்றன.தேனீக்களால் 30 முதல் 40சதவிகிதம் மகசூல் அதிகரிக்கும். இவற்றில் மட்டுமல்ல, காய்கறி பயிர்களான கத்திரி, தக்காளி,புடல்,பாகல், சுரைக்காய், முள்ளங்கி, காளிப்ஃபளவர், நூல் கோல் போன்ற பயிர்களில் மகசூல் அதிகரிக்கவும் தேனீக்கள் வித்திடுகின்றன. இதனால் தேனீக்கள் "விவசாய தேவதை"என்று அழைக்கப்படுகிறது.
காப்பாற்ற வழிகள் (Save)
-
ஆனால் அழியும் தருவாயில் உள்ள இந்த தேவதைகளைக் காப்பாற்றிட, நாம் மண் பரிசோதனை உரமிடுவது மற்றும் இராசயன உரங்கள், அதிக விஷத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
மரபணு மாற்றப்பட்ட விதை சாகுபடியை ஊக்குவிப்பு தவிர்க்க வேண்டும்.
-
இப்படி செய்வதால் தேனீக்களின் அழிவைத் தடுக்கலாம்.
-
நிதி ஒதுக்கீடு
தேனீக்களின் அருமை உணர்ந்த மத்திய அரசு இந்த கொரோனா தொற்றால் பொருளாதார நலிவுற்ற நிலையிலும் தேனீ வளர்ப்பு என ₹500கோடி நிதி ஒதுக்கீடு செய்தது பாராட்டுக்குரியது. மேலும், மத்திய மாநில அரசுகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மானிய விலையில் தேனீப்பெட்டி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
சிறுதானிய இனிப்புகளுடன் இந்த ஆண்டு தீபாவளி-இது எப்படி இருக்கு!
சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்!