Farm Info

Sunday, 03 July 2022 11:01 AM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தின் இந்தத் தகுதிகள் இல்லாதவர்களுக்கு ரூ.6,000 நிதி கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதைத் தெரிந்துகொண்டால், பயனாளிகளாக நமக்குத் தகுதி உள்ளதா? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பிஎம் கிசான் திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைப் போக்கும் வகையில், அவர்களது வங்கிக் கணக்கில் மத்திய அரசு ஆண்டுக்கு 6000 ரூபாய் செலுத்துகிறது.
தற்போது வரை இந்தத் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. சில சமயங்களில் விண்ணப்பம் குறித்தும், சில சமயங்களில் தகுதி குறித்தும் பல புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

யாருக்கு கிடைக்காது

பிஎம் கிசான் திட்ட விதிகளின்படி, கணவன்-மனைவி இருவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது. அப்படி யாராவது செய்தால், அவரது தகுதி நீக்கப்பட்டு பலன்கள் நிறுத்தப்படும்.

வரி செலுத்தினால்

இந்தத் திட்டத்தின் விதிகளின்படி, விவசாயிகளின் குடும்பத்தில் யாராவது வரி செலுத்தினால், இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது. அதாவது, கணவன்-மனைவி இருவரில் ஒருவர் கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியிருந்தால், அவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியாது.

வேறு பணிகள்

திட்டத்தின் விதிமுறைப்படி, ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாய வேலைக்கு பயன்படுத்தாமல், வேறு வேலைகளுக்கு பயன்படுத்தினால் அல்லது மற்றவர்களின் வயல்களில் விவசாயம் செய்தால், அந்த வயல் அவருக்கு சொந்தமானது அல்ல. அத்தகைய விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

தாத்தா பெயரில்

விவசாயம் செய்யும் நபர் ஒருவரின் வயல் அவரது பெயரில் இல்லாமல், அவரது தந்தை அல்லது தாத்தா பெயரில் இருந்தால், அவருக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

மற்றவர்கள்

ஒருவர் விவசாய நிலத்தின் உரிமையாளராக இருந்தும், அவர் அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வு பெற்றவராகவோ, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தால், அவர்களும் பிம் எம் கிசான் திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.

தொழில்முறை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தகுதியற்றவர்களின் பட்டியலில் வருகிறார்கள். வருமான வரி செலுத்தும் குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது.

திருப்பிச் செலுத்த

தகுதியில்லாத விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் அனைத்து தவணைகளையும் அரசிடம் திருப்பிச் செலுத்த வேண்டி நிலை ஏற்படும். மீறுவோர் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)