Farm Info

Wednesday, 13 April 2022 01:02 PM , by: Deiva Bindhiya

Will coconut goes go up? Minister of Agriculture

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (ஏப்ரல் 12,2022) கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிவு செய்யப்பட்டது. மேலும், தகவலுக்கு, கீழே படிக்கவும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், கோவி.செழியன், அண்ணாதுரை, அசோக்குமார், மற்றும் வேல்முருகன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்துவது குறித்தும், கொப்பரை தேங்காய் கொள்முதல் மேல் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் முன்மொழிந்தனர்.

கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: இதற்குப் பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் கொப்பரை தேங்காய்க்கான கொள்முதல் நிலையங்கள் மக்களின் பயன்பாட்டிற்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கொப்பரை தேங்காய் ரூ.105-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. கடந்த அதிமுக ஆட்சியில், 2019ஆம் ஆண்டில் 310 மெட்ரிக் டன்னும், 2020ஆம் ஆண்டில் 43 மெட்ரிக் டன்னும் 2021ஆம் ஆண்டில் 29 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ஆம் ஆண்டில் 1,232 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலும் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டு (ஏப்ரல் 11, 2022) முதல் செய்யப்படுகிறது. எனவே கொப்பரை விலை கண்டிப்பாக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிச்சயமாக விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்' என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

Hair Care: தேங்காய், தேன்.. உபயோகித்து கூந்தலுக்கான ஹேர் மாஸ்க் !

தொடர் விடுமுறை முன்னிட்டு 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)