அழிவின் விளிம்பில் உள்ள உழவு மாடுகளை மீட்டெடுக்க, அரசு விவசாயிகளுக்கு உழவு மாடு வாங்க மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆதரவுத் தொழில் (Support industry)
விவசாயத்தைப் பொறுத்தவரை, கால்நடைகள் வளர்ப்பு என்பது, சாகுபடி பலன் தராதக் காலகட்டத்தில், நிச்சயம் கைகொடுக்கும். அதனால்தான் கால்நடை வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஆதரவுத் தொழிலாகக் கருதப்படுகிறது.
உற்றத் துணைவன் (Best Partner)
இதனைக் கருத்தில்கொண்டே பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை வளர்க்கவும் செய்து வந்தனர். பால்வருமானம் உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான ஆதரவு மட்டுமல்லாமல், உழவுத் தொழிலுக்கும் மாடுகள் பெரிதும் உதவி புரிந்து வந்தன. இதனால் விவசாயத்திற்கு உற்றத் துணைவனாகவும் மாடுகள் விளங்கின.
பின்னிப் பிணைந்த பந்தம் (Knitted bond)
ஆரம்பக் காலங்களில் உழவு மாடுகளை வைத்தே விளைநிலங்களை உழவு செய்து விவசாயப் பணி மேற்கொண்டு வந்ததால், விவசாயத்தோடு, கால்நடைகளும் பின்னிப் பிணைந்த பந்தத்தோடு இருந்தன.
இயந்திர மயம் (Mechanical religion)
ஆனால், டிராக்டர் வருகையால், உழவு மாடுகள் பயன்பாட்டை குறைத்து, முற்றிலும் இயந்திரமயமான டிராக்டர் பயன்பாட்டிற்கு விவசாயிகள் மாறிவிட்டனர்.
இந்த நிலையில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே இன்றளவும் உழவு மாட்டை பயன்படுத்தி உழவுப் பணியை மேற்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கிருமி நாசினி
இது தொடர்பாக விவசாயி சுப்பிரமணி கூறுகையில், உழவு மாடுகள் மூலம் விவசாயம் செய்த காலத்தில், மாடுகளின் சாணம், உரமாகவும், வீடுகளில் சமையல் எரிபொருளாகவும், வீட்டுமுற்றத்தில் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
ரூ.1.3 லட்சம் வரை (Up to Rs.1.3 lakh)
நோய் தாக்குதல் குறைந்து பயிர்களும், மனிதர்களும் ஆரோக்கியத்துடன் இருக்கும் சூழல் ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் 6000 முதல் 10 ஆயிரத்திற்குள், ஒரு ஜோடி உழவு மாடு வாங்க முடியும்.
தற்போது 90 ஆயிரம் முதல், ஒரு லட்சத்து முப்பதாயிரம் வரை ஒரு ஜோடி மாடு விற்கப்படுகிறது.
மானியம் வேண்டும் (To grant)
எனவே உழவு மாடு வாங்க, விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி, உழவு மாடு பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆக நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வரமாகவும், கால்நடைகளுக்குச் சாபமாகவும் அமைந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் படிக்க...
பசு மாட்டிற்கு வளைகாப்பு- புதுக்கோட்டையில் புதுமை!
உலகிலேயே குள்ளமான பசு- வெறும் 51 சென்டிமீட்டர்தான் அதன் உயரம்!