விவசாயிகளுக்கான அரசின் நிதியுதவியைப் பெறுவதற்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது.
பிஎம்-கிசான் (PM-Kisan)
பிரதமரின் கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
10 கோடி விவசாயிகள் (10 crore farmers)
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு விரைந்து வழங்கி வருகிறது. சமீபத்தில்தான் பிஎம் கிசான் திட்டத்தின் எட்டாவது தவணையை சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு டெபாசிட் செய்தது.
நேரடிப் பணப்பரிமாற்றம் (Direct money transfer)
பிஎம் கிசான் நிதியுதவியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படுகிறது.
பல பிரச்னைகள் தவிர்ப்பு (Avoidance of many problems)
இதன் மூலம் இடைத்தரகு, சுரண்டல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கை ஆக்டிவாக வைத்திருப்பது அவசியமாகும்.
ஆதார் இல்லாமல் கிடைக்காது (Not available without Aadhaar)
அதேநேரம், அந்த வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாகும். சம்பந்தப்பட்டவரின் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அந்த விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காது.
ஆதார் இணைப்புக் கட்டாயம் (Aadhaar link is mandatory)
அசாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
உடனே இணைத்துவிடுங்கள் (Connect immediately)
எனவே, பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இன்னும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்காமல் இருந்தால் உடனடியாக இணைத்துவிடுவது நல்லது. அப்போதுதான் நிதியுதவி தங்கு - தடையில்லாமல் கிடைக்கும்.
மேலும் படிக்க...
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
காய்கறி, பழங்களை முழு ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு
கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!