உலகின் நீளமான வெள்ளரிக்காயை உற்பத்தி செய்து, இங்கிலாந்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், வினோதமான தருணங்களையும், அரிதான செயல்கள் செய்யும் மனிதர்கள் உள்பட பலரையும் சாதனை புத்தகத்தில் சேர்த்து, அவர்களை பெருமைப்படுத்தி வருகிறது கின்னஸ் புத்தகம்.
கின்னஸ் உலக சாதனை (GWR)
இங்கிலாந்தின் சௌதம்டன் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி செபாஸ்டின் சுஸ்கி. இவர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில், உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் விளைவித்த இந்த நீளமான வெள்ளரிக்காய் குக்குமிஸ் சாவடிஸ் (Cucumis sativus) என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
இதற்கு முன்னதாக, 6.2 செ.மீ. நீளம் வரை வளர்க்கப்பட்ட்ட வெள்ளரிக்காய் கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செபாஸ்டின் தன்னுடைய தோட்டத்தில் 113.4 செ.மீ. நீளமுள்ள மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், கடந்த சில மாதங்களாகவே இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட வெப்ப அலைகள் பண்ணைகளின் விளைபொருள்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், செபாஸ்டின் தன்னுடைய தோட்டத்தில் நீண்ட வெள்ளரிக்காய் ஒன்றை உற்பத்தி செய்து சாதனை படைத்து, பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
மேலும் படிக்க
நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!