Farm Info

Sunday, 04 September 2022 06:03 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகள் எல்லா நேரத்திலும் உழைப்பதைவிட, பயிருக்கு என்ன தேவை என்ற நுட்பத்தை அறிந்துகொண்டு உழைப்பது சிறந்த பலனைத் தரும். அந்த வகையில், பயிரின் வளர்ச்சிக்கும் அதிக அளவாக மகசூலையும் பெற மண்புழுநீர் தெளிக்கலாம்.

மண்புழுநீர் தயாரிக்கும் முறை

மண்புழுநீர் எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட மண்புழுநீர் (WARMI WASH) தயாரிக்க 1அடி உயரம் 3 அடி அகலத்துக்குசெங்கலை அடிக்கி வைக்கவும்.அதன்மீது பெரிய பிளாஸ்டிக் டிரம் வைக்கவும்.

அதன் கீழ்பகுதியில் டி ஜாயிண்ட்ப் பொருத்தி, ஒருமுனையில் குழாயையும்,  மறு முனையில் முடியையும் பொருத்த வேண்டும்.கீழ்பகுதியில் அடைப்பு எற்பட்டால் இந்த மூடியை திறந்து சுத்தம் செய்யலாம்.டரம்மின்அடிப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு 3/4 ஜல்லி யை போட்டுஅதற்குபின்1 அடி உயரத்திற்கு மணல் போட வேண்டும்.

அதன்பின் நிலத்து மண்ணை போட வேண்டும். இதில் 200 முதல் 250 மண்புழுக்களை இட வேண்டும். பின் வைக்கோல் மற்றும் காய்ந்துபோன இலைதழைகளைப் பரப்பி, அதன்மீது சாணக்கறைசல் அல்லது சாண உருண்டைகளை போடவும். இந்தக் கலவையில், தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்த 16 வது நாள் கழித்து அந்த ட்ரமில் உள்ள தண்ணீரைச் சேமிக்க வேண்டும். இதுதான் மண்புழுநீர். இப்படித் தயாரிக்க பட்ட நீரை பாத்திரத்தில் சேமிக்கலாம்.இது சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட நீர் யாகும்.

பயன்படுத்தும் முறை

  • 1 லிட்டர் மண்புழுநீரில் 9 லிட்டர் தண்ணீரைக் கலந்து எல்லாப் பயிர்களுக்கும், பூ பூக்கும் பருவத்திற்கு, முன்பு தெளிக்கலாம் அவ்வாறுத் தெளித்தால், அடுத்தப் பத்தே நாளில் இதன் பலனை பார்க்க முடியும்.

  • 1லிட்டர் மண்புழுநீர் + 1 லிட்டர் மாட்டு கோமியம்+ 8 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இது வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டி யாகவும் செயல்படுகிறது.

சீரான இடைவெளியில்,தெளித்து வந்தால்மண் வளமும் கூடுவதுடன் பயிர்கள் நன்றாக செழித்து வளரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவது போல அதிகமாக இதனை பயன்படுத்த கூடாது. எனவே இந்த முறைபடி மண்புழுநீரை தயாரித்து, பயன்படுத்தி மகசூல் பெருக்கம் கண்டு மகிழும் விவசாயிகளாக மாறுவோம்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)