Farm Info

Tuesday, 15 December 2020 07:39 AM , by: Elavarse Sivakumar

Credit: 4k Wallpaper

மதுரையில் உள்ள வேளாண் கல்லூரி சார்பில் வரும் 16ம் தேதி ஒருநாள் தேனீ வளர்ப்பு பயிற்சி (Bee Keeping) அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே முன்பதிவு செய்யுங்கள்.

தேனீக்களின் முக்கியத்துவம் (Importance of Honey)

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், அந்த விவசாயத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்பவை எதுவென்று தெரியுமா? அவைதான் தேனீக்கள். உண்மையில் தோட்டத்தின் இயற்கை தேவதைகள்தான் இவை.

வேளாண் பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற முழு காரணம் தேனீக்கள் தான்(Bees). தேனீக்களின் உணவு மலரில் உள்ள மதுவும் மகரந்தமும் தான். தேனீக்களின் வாழ்க்கை கூட்டுக்குடும்பம் வாழ்க்கையாகும்.

தேன் கூட்டில் ஓரே ஒரு ராணித்தேனி அதாவது 10 சதவீதம், ஆண்தேனீ மற்றும் 90% வேலைக் கார தேனீக்களும் இருக்கும். ஆகத் தேனீக்கள் வளர்ப்பு நமக்கு பல விஷயங்களைச் சொல்லித் தருகிறது. 

தேனீ வளர்ப்பு பயிற்சி (Bee Keepting Training)

எனவே தேனீ வளர்க்க வேண்டும் என விரும்புபவர்களா நீங்கள்? உங்களுக்கு இதோ ஒரு அரிய வாய்ப்பு.

வரும் 16ம் தேதி மதுரையில் உள்ள வேளாண் கல்லூரியில் நடைபெறும் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியின் பங்குபெறுங்கள்.

நாள் : 16.12.2020

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை

இடம் : பூச்சியியல் துறை, வேளாண் கல்லூரி, மதுரை

கட்டணம் : ரூபாய் 590/- (வரிகள் உட்பட)

சான்றிதழ் வழங்கப்படும்

தொடர்புக்கு  (For Contact)

தலைவர்

பூச்சியியல் துறை, வேளாண் கல்லூரி, மதுரை

Land line : 0452 2422956

WhatsApp No. 99652 887

மேலும் படிக்க...

1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!

ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது! - டெல்லியில் குவிந்த விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)