இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 January, 2022 9:36 AM IST

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல காய்கறிகள் 10 முதல் 15 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்படுகின்றன.
காய்கறி விளைச்சலைப் பொறுத்தவரை, சரியானநேரத்தில் மழை கைகொடுத்தால், அமோக விளைச்சல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானமும் ஈட்ட முடியும்.

அதே மழை அறுவடைக்கு முந்தையக் காலகட்டத்தில், கொட்டித் தீர்த்தால், காய்கறிகள் அழுகும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வது வாடிக்கை.

அந்த வகையில், கடந்தாண்டு அக்டோபர் முதல் பருவமழையால் பலவகை காய்கறிகளின் விளைச்சல் பாதித்தது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை, கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாக நேர்ந்தது.

வரத்து அதிகரிப்பு (Increase in supply)

தற்போது, மாநிலத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோயம்பேடில் மொத்த விலையில் காய்கறிகள் விலைக் கணிசமாக குறைந்துள்ளது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ முள்ளங்கி 8-10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவ்சவ் 5-8 ரூபாக்கும், கத்தரிக்காய் 10-15ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

விலை விபரம் (Price details)

பாகற்காய் 15, சுரக்காய் 10, சேனைக்கிழங்கு 13, சேப்பங்கிழங்கு 15 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிலோ வெள்ளரிக்காய் 10, இஞ்சி 20, அவரைக்காய் 20, நுாக்கல் 12, கோவக்காய் 15, வாழைக்காய் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ தக்காளி 25, உருளைக்கிழங்கு 15, பெரிய வெங்காயம் 20-35, சின்னவெங்காயம் 50-65, பீட்ரூட் 30, கேரட் 40, வெண்டைக்காய் 30, கோஸ் 40, பச்சைமிளகாய் 35 ரூபாய்க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கொள்ளை

காய்கறிகள் விலை கோயம்பேடில் குறைந்தாலும், அவற்றை வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், தங்கள் பகுதிகளில் கூடுதல் விலையிலேயே அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அதாவது பழைய விலையிலேயே விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட வழி பார்க்கின்றனர்.

இதனால், காய்கறிகள் விலை குறைவின் பயனை அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

ரூ.10 ஆயிரம் உயர்வு பஞ்சு விலை- ஸ்தம்பித்த ஜவுளித்துறை வர்த்தகம்!

பருத்தி விலை 10 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்ப்பு!

English Summary: Yield increase - Eggplant 8 rupees per kilo - Radish 10 rupees!
Published on: 22 January 2022, 09:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now