தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலை நோக்கு திட்டங்களை வகுத்து கொடுத்து இருக்கிறார். அவற்றில் ஒன்று தான் இது.
விவசாயியை மகிழ்ச்சியடைய வைப்பது, பணம் பொருள் அல்ல, அவர்கள் வியர்வை சிந்தி, உழைத்த பயிரில் கிடைக்கும் அதிகப்படியான விளைச்சல் மட்டுமே. காரணம் மகசூலை அவ்வாறு உருவாக்க உதவிகரமாக இருப்பது தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்.
ஒட்டு மொத்த கிராமத்தின் வளர்ச்சிக்கு இத்திட்டம் அடிப்படையாக அமையும்.
நாட்டின் பொருளாதாரமே. கிராமத்தின் அடிப்படையாக அமைந்தது. இன்றைய கால் கட்டத்தில் கொரணா தொற்று காலத்தில் கூட மற்ற துறைகள் முடங்கிய நிலையில் நாட்டின் ஓட்டு மொத்த வளர்ச்சியை உயர்த்தியது வேளாண் தொழில் அடிப்படையாக கொண்ட வளர்ச்சி தான்.
இன்றைய காலகட்டத்தில் காந்தியடிகள் கண்ட கிராம வளர்ச்சி மெல்ல மெல்ல நலிந்து, போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலை, கூட்டு குடும்பங்கள் சிதைவு, கால் நடை இல்லாமை உள்ளிட்டவற்றால் சிதைவு அடைந்த நிலையில் காணப்படுகிறது.
கிராம மக்கள் மெல்ல மெல்ல நகரங்களை நோக்கி படை எடுப்பது தடுத்திட கிராம தன்னிறைவு பெற்றிட இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை
94435 70289.
மேலும் படிக்க...