விவசாயம் என்பது நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்த ஒன்று.இதை நிரூபிக்கும் வகையில்,கொரோனாக் கட்டுப்பாடுகளால்,இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்ஸிகளில் தோட்டங்களை உருவாக்கி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் தாய்லாந்து மக்கள்.
கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் ஒருபகுதியாக, தாய்லாந்தில் பலக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
கட்டுப்பாடுகள் (Restrictions)
கோவிட் கட்டுப்பாடுகளால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் டாக்ஸிகள் ஓடவில்லை. இதனால் வாகன நிறுத்துமிடங்கள் டாக்ஸிகளின் கல்லறைகளாக மாறறத் தொடங்கின.
உயிர் கொடுக்கலாம்
எனவே அவற்றிற்கு உயிர் கொடுக்கலாம் என அப்பகுதி மக்கள் நினைத்தனர். சிறு சிறுக் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் இணைந்து விவசாயம் செய்ய முன்வந்தனர். இதன் விளைவாக தலைநகர் பாங்காக்கின் மேற்கில் ஒரு திறந்தவெளி கார் பார்க்கிங்கில், மினி காய்கறி தோட்டங்கள் மற்றும் குட்டி குளங்களை உருவாக்கியுள்ளனர்.
காய்கறித் தோட்டம் (Vegetable garden)
கேட்க மட்டுமல்ல, பார்க்கவும் பிரமிப்பை ஏற்படுத்தும் இந்த முயற்சியால், டாக்ஸிகளின் பொன்னெட்டுகளில், சிறியக் காய்கறித் தோட்டங்கள் உருவாகியுள்ளன. இதில் கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரிக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளும், புனிதமான துளசியும் பயிரிடப்படுகின்றன. அதேநேரத்தில் இந்த வண்டிகளின் உதிரிப் பாகங்களும் உபயோகமற்ற டயர்களும் சிறிய குளங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கூட்டு உழைப்பு (Collaboration)
தங்களிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு தரமான பொருட்களை விளைவிக்கின்றனர். அவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கும் இவர்களது கூட்டு உழைப்பு என்றுமே வணக்கத்திற்குரியது.
மேலும் படிக்க...
நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!