பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 August, 2023 2:37 PM IST
Apply today for a free sewing machine with electric motor!

சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட ஆணை வரப்பெற்றதை தொடர்ந்து சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்வாறும் தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.

  1. தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  2. ஆண்டு உச்சவரம்பு ரூ.1,00,000/- ஆக இருத்தல் வேண்டும்.
  3. வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
  4. கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  5. ஒரு முறை தையல் மேஷின் வாங்கியவராக இருப்பின் மீண்டும் தையல் மேஷின் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.
  6. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம்.

இலவச தையல் மிஷின் பெற எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தரை தளத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

மேலும் படிக்க:

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP): தொழில் தொடங்க ரூ.50 லட்சம் கடனுதவி

விவசாயிகளின் தொழில்நுட்ப சந்தேகங்கள் களைய நடவடிக்கை: உங்கள் மாவட்ட ஆலோசகரை அணுகவும்

English Summary: Apply today for a free sewing machine with electric motor!
Published on: 07 August 2023, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now