பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 March, 2023 11:05 AM IST
Awareness camp for entrepreneurs in Chennai held on march 14

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு படித்த மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வகுத்து செயல்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கு திறம்பட பயிற்சி வழங்கி, தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன்களையும் பெற வழிவகை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் எனவும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்படுத்தி தரப்படும் எனவும் மேலும் விவரங்களக்கு தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: (96771 52265, 8668102600, 044-22252081, 22252082) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்

கொப்பரை கொள்முதல் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும்- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

English Summary: Awareness camp for entrepreneurs in Chennai held on march 14
Published on: 11 March 2023, 11:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now