State

Monday, 27 November 2023 02:55 PM , by: Muthukrishnan Murugan

agricultural land

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்.

ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விவசாய நிலம் வாங்க தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறவும் வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் வரை மானியம்:

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினைத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 % மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்கள். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604.தொடர்புக்கு: அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112.

விவசாயிகளுக்கு விருது: பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட உள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ள விவசாயிகள் http://www.tnhorticulture.tn.gov.in என்கிற தோட்டக்கலைத்துறை இணையதளம் மூலமாகவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

3 சதவீத வட்டி சலுகையில் வேளாண் உட்கட்டமைப்பு கடன் வசதி முகாம் !

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)