மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 November, 2020 7:56 PM IST
Credit : Tamil Mirror

உலகுக்கே உணவு வழங்கும் உழவர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம், திருமணத்துக்கு ரூ.10 ஆயிரம், குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை  வழங்குவதற்காக அறிமுப்படுத்தப்பட்டதே புதிய உழவர் பாதுகாப்பு திட்டம்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய, விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

தகுதிகள் (Qualifications)

இதற்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்று பெயர். இத்திட்டத்தில் இணைய இரண்டரை ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.

அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.

அடையாள அட்டை (Idendity Card)

ஒரு குடும்பத்தில் விவசாய தொழிலில் ஈடுபடும் கணவன், மனைவி இருவருக்கும் மெருன் வண்ணத்திலும், அவர்களை சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெறும் அனைவரும் அரசின் திட்ட உதவிகளை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

Credit : Vikatan

சலுகைகள்:

கல்வி உதவி( Education Aid)

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
பட்டயப்படிப்புக்கு (Diploma)ஆண்டு ஒன்றுக்கு ரூ.1250 முதல் ரூ.1950 வரையும், பட்டப்படிப்புக்கு (Degree)ரூ.1750 முதல் ரூ.2500 வரையும், முதுகலை பட்டப் படிப்புக்கு(PG) ரூ.2250 முதல் ரூ.3750 வரையிலும், சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு ரூ.2250 முதல் ரூ.4750 வரையிலும், இவற்றில் முதுகலை பட்டப்படிப்புக்கு ரூ.4250 முதல் ரூ.6750 வரையிலும் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.

திருமண உதவி(Marriage Aid)

சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையாக ஆணுக்கு ரூ.8 ஆயிரமும் , பெண்ணுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம் (Senior Citizen Pension)

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஈடச்சடங்கு உதவி (Ceremonial assistance)

உறுப்பினரோ அல்லது அவரை சார்ந்தவரோ இறக்க நேரிட்டால் அந்தக் குடும்பத்துக்கு ஈமச் சடங்குக்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவதற்காக தற்போது மனுக்கள் பெறப்படுகின்றன. பழைய அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் புதுப்பித்து கொள்ளலாம்.

தொடர்பு அலுவலர் : கிராம நிர்வாக அலுவலர்.

தேவையான ஆவணங்கள் (Documents)

  • குடும்ப அட்டை நகல் (பழையது),

  •  குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு),

  • குடும்பத் தலைவருடைய புகைப்படம் -1,

  • குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆதார் அட்டைகளின் நகல்,

  • பழைய உழவர் அடையாள அட்டை நகல் ( புதுப்பிப்பவர்கள் மட்டும்).

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

English Summary: Do you know the farmer protection scheme that gives Rs. 10 thousand for marriage? Prior to receiving petitions!
Published on: 12 November 2020, 07:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now