மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 August, 2020 6:21 PM IST
Credit: Change.org

அன்போடும், பாசத்தோடும் வளர்க்கப்பட வேண்டிய குழந்தைகள், பொருளாதார மின்மை, நோய் உள்ளிட்ட பல சூழ்நிலைகளில் பெற்றோரை இழக்க நேர்ந்து விடுகிறது.

அவ்வாறு தனிமைப் படுத்தப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தமிழக அரசின் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டந்தோறும் குழந்தை பாதுகாப்பு அலகு என்ற நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் (Scheme goal)

பாதுகாப்பற்ற சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் அத்துமீறல், புறக்கணிப்பு, விட்டுவிடுதல் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்துதல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவா்களின் மறுவாழ்விற்கு தேவையான பங்களிப்பினை அளித்தலே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நிதி ஆதரவு (Financial Assistance)

குழந்தைகளின் மருத்துவம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் இதரத் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.

தகுதி

  • 18 வயது வரையுள்ள குழந்தைகள்

  • கிராமப்புறத்தில் ரூ.24000/- நகர்ப்புறத்தில் ரூ.30000/- பெருநகரங்களில் ரூ.36000/- ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.

  • மத்திய மாநில அரசுகளின் வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறாத குழந்தைகள்.

  • குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியுள்ள நிலையில், குடும்பம் சார்ந்த பராமரிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ள குழந்தைகள்.

Credit:Dinamani

முன்னுரிமை

  • விதவை தாய்மார்களின் குழந்தைகள்

  • தொழுநோய் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்

  • சிறைவாசிகளின் குழந்தைகள்

நிதி விபரங்கள்

  • ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- வீதம் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • மூன்று வருடங்கள் நிறைவு அல்லது 18 வயது பூர்த்தியடையும் நாள், இதில் எது முன்னர் நிகழ்கிறதோ அதுவரை மாதம் ரூ.2000/- மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • மனு
  • ஒரு புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு)
  • கல்விச்சான்று
  • வருமானச்சான்று
  • குழந்தையின் வங்கிகணக்கு புத்தகத்தின் நகல்
  • குழந்தை / பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்
  • குடும்ப அட்டை நகல்
  • தாய் / தந்தை இறந்திருப்பின் இறப்புச்சான்று நகல்
  • தாய் / தந்தை / குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களின் நகல்.
  • குழந்தை தொடர்பாக வேறு ஏதேனும் ஆவணங்கள் இருப்பின் அவற்றின் நகல்.

விண்ணப்பித்தல்

இந்த திட்டத்தில் பயனடைய விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள "மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அளிக்கலாம். இதுதவிர வளர்ப்பு பராமரிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வளர்ப்பு பராமரிப்பு திட்டம்

குழந்தை நலக்குழுவின் ஆணையின் படி ஒரு குழந்தை, தான் பிறந்த குடும்பம் அல்லாத வேறு ஒரு குடும்ப சூழலில் தற்காலிகமாக பராமரிக்கப்படுவது வளர்ப்பு பராமரிப்பு ஆகும்.

தகுதி

  • குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியுள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்.

  • தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், எங்கள் குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை எனவும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்குமாறும் குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு விண்ணப்பித்த பெற்றோர்களின் குழந்தைகள்.

  • மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகள் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகள்.

  • தாய் தந்தை இருவருமோ அல்லது எவரேனும் ஒருவர் சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள்.

  • உடல் ரீதியான, உணர்வு ரீதியான, பாலியல் ரீதியான, இயற்கை பேரழிவு, உள்நாட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

    நிதியுதவி

    வளர்ப்பு பராமரிப்பில் உள்ள குழந்தையை பராமரிக்க நிதியுதவி தேவைப்படின், குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.2000/- மட்டும் வழங்கப்படும்.

    மேலும் படிக்க...

    தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கம் திட்டம் - மத்திய அரசு வழங்குகிறது!

    ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!

English Summary: Government of Tamil Nadu's scheme to provide Rs. 2,000 per month to orphans
Published on: 04 August 2020, 05:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now