PM Kisan திட்ட பயனாளிகளுக்கு இரட்டிப்பு பலன்களை வழங்கும் வகையில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு காரீஃப் பருவம் தொடங்குவதற்கு முன் ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், பல மாநில அரசுகள் PM Kisan பயனாளிகளுக்கு இரட்டிப்புப் பலன்களைக் கொண்ட திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அதாவது PM Kisan-ஐத் தவிர விவசாயிகள் தங்கள் மாநிலத்தின் சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள கூடுதல் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5000 நிதியுதவி வழங்க உள்ளது. திட்டங்கள் மற்றும் பயனாளர் வரையறை குறித்து முழுமையாக கீழே காணலாம்.
க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா :
ஜார்கண்ட் மாநிலத்தில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான சாகுபடி நிலம் உள்ள விவசாயிகளுக்கு காரீஃப் பருவம் தொடங்கும் முன் ஏக்கருக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் நிதியுதவி விரும்பினால், 5 ஏக்கருக்கு மொத்தமாக ரூ.25,000 மானியமாக பெற இயலும்.
இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் ஏற்கனவே பயன்பெறும் விவசாயிகள் முக்யமந்திரி க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா மூலம் பயன் பெறலாம். இந்த முறையில் ஒரு வருடத்தில் PM kisan நிதியுதவி ரூ.6000 உடன் மொத்தம் ரூ.11,000 வரை மானியமாக கிடைக்கும். ஜார்கண்டில் உள்ள 22 லட்சத்து 47 ஆயிரம் விவசாயிகளுக்கு முக்யமந்திரி க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா உதவும் என கூறப்பட்டுள்ளது.
திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதி:
இந்தத் திட்டம் ஜார்க்கண்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
முக்யமந்திரி க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா (Mukhyamantri Krishi Ashirwad Yojana) திட்டத்தில் பயன்பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஜார்க்கண்ட் அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட திட்டத்தின் தகவல் குறித்து மேலும் அறிய ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
மேலும் காண்க:
பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?