புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம். மேலும் தேவையான ஆவணங்கள் மற்றும் யாரை அணுக வேண்டும் என்கிற விவரங்களும் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆழ்துளை கிணறு நிலத்தடி நீரின் நிலையான மற்றும் நம்பகமான ஆதாரத்தை வழங்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவுகிறது. குறிப்பாக ஒழுங்கற்ற மழை பெய்யும் பகுதிகளில், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு போதுமான நீரேற்றம் கிடைப்பதை உறுதிசெய்து, பாசனத்திற்காக தண்ணீரை அணுகலாம். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, விளைச்சலை அதிகரிக்கிறது மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கிறது, உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கிறது.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு / குறு விவசாயிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் நீர்பாசன கடன் திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் தகவல்.
மேலும் படிக்க: டிராக்டர் வாங்க 35% மானியம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு / குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிக்காக விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு வரை அதிகபட்சமாக ரூ.50,000 வரை அரசு மானியம் பின் நிகழ்வாக வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை அறிக?
சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு / குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா (மற்றும்) அடங்கல் நகல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டேரர் (மற்றும்) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
35% மானியத்துடன் டிராக்டர் வாங்குவதற்கு கடனுதவி பெறலாம் | Msme Needs Scheme | Enam | Pest manage