குறைந்த வாடகைக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பதிவு செய்ய விவசாயிகள் உழவர் செயலி வழியாக அனுகி பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின் விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. இத்துறையில் குறைந்த வாடகைக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பதிவு செய்ய விவசாயிகள் இ வாடகை செயலியை உழவர் செயலி வழியாக அனுகி பயன்பெறலாம்.
இ-வாடகை செயலி: இயந்திரங்கள் விவரம்
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 5 மண் தள்ளும் இயந்திரங்கள் (Bull Dozer), 20 வட்டாரத்திற்கு ஒன்று வீதம் (Tractor) டிராக்டர்கள், ஒரு ஊர்ந்து செல்லும் மண் அள்ளும் இயந்திரங்கள் (Crawler Excavator), 3 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (Back Hoe with Front End Loader- JCB), தேங்காய் பறிக்கும் ஒரு இயந்திரம் தற்போது வாடகைக்கு விவசாயிகளுக்கு இ வாடகை செயலி வழியாக விடப்பட்டு வருகிறது.
மேலும், நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து, விதைத்தல், கரும்பு/காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல் அறுவடை, பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்து, நிலக்கடலைகளை பறித்தல், வாழைத்தண்டை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், நீர் இறைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
வாடகை எவ்வளவு?
இதுபோன்று டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.500/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இ-வாடகை செயலி வழியாக வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
Read also: கோமியத்தினை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
இது போன்று மண் தள்ளும் இயந்திரம் (Bull Dozer) மணிக்கு ரூ.1,230/-க்கும், மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், ஊர்ந்து செல்லும் மண் அள்ளும் இயந்திரங்கள் (Crawler Excavator) மணிக்கு ரூ.1,910/-க்கும், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (JCB) மணிக்கு ரூ.890/-க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் மணிக்கு ரூ.450/-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் இ-வாடகை செயலி மூலம் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
யாரை அணுகுவது?
- உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), குமாரசாமிப்பட்டி சேலம் -7, அலைபேசி எண்: 0427-2905277, மற்றும் தொலைபேசி எண்-97510 08321.
- உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), நங்கவள்ளி ரோடு, கோனுர் அஞ்சல்.அலைபேசி எண்: 04298-290361 மற்றும் தொலைபேசி எண்: 98949 34388 .
- உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), தென்னங்குடிபாளையம் ஆத்துார்,அலைபேசி எண்: 04282-290585 மற்றும் தொலைபேசி எண்: 82205 34258.
- உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), சேலம் மெயின் ரோடு, சங்ககிரி,அலைபேசி எண்: 04283–290390 மற்றும் தொலைபேசி எண்: 94432 49323.
- செயற்பொறியாளர் (வே.பொ.), குமாரசாமிப்பட்டி சேலம் -7, அலைபேசி எண்: 04283–290390 மற்றும் தொலைபேசி எண்: 94430 89053.
எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் மேற்கண்ட முகவரியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அனுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read more:
மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு- வேளாண் விஞ்ஞானிகள் கொடுத்த ஜடியா!
1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!