விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க ஏதுவாக, விவசாயிகள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைப்பதற்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது.
ரூ.3 கோடி நிதி (Rs.3 Crore Fund)
விவசாயிகள் சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது.இதற்காக 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் சேதம் (Crop Damage)
யானைகள், காட்டெருமைகள், குரங்குகள் போன்ற விலங்குகள் பயிர்களை பெரிதும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.
இவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின்வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். விலங்குகள் இதனை அணுகும் போது உடலில் லேசான அதிர்வு ஏற்படும். இதனால் உயிர் சேதங்கள் ஏற்படாது.
யானை போன்ற பெரிய வன விலங்குகள் உள்ள மாவட்டங்களைத் தவிா்த்து, மற்ற மாவட்டங்களில் காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் மூலம் மானியமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ப மின்வேலி அமைப்பை 5 வரிசை (மீட்டருக்கு ரூ.250), 7 வரிசை (மீட்டருக்கு ரூ.350), 10 வரிசை (மீட்டருக்கு ரூ.450) தோ்வு செய்து கொள்ளலாம். இதேபோல், தனிநபா் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் வரை ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3,456 மீட்டா் வரை சூரிய மின்வேலி அமைக்க ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (National Agriculture Development Scheme)
சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய இந்த மின் வேலி அமைக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
யாரை அணுகுவது? (Whom to contact)
அதிகபட்சமாக 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியம் பெற நீங்கள் விரும்பினால் உங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுக வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
ஆதார் அட்டை நகல், தங்களுடைய புகைப்படம் இரண்டு, தங்களுடைய நிலத்தின் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
விவசாயச் சுற்றுலா செல்ல விருப்பமா? ATMAதிட்டம் உங்களுக்கு உதவும் !
டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!