வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 June, 2023 1:59 PM IST
Subsidy for Drip, Rain Sprinkler Irrigation System for Kancheepuram farmers

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழை தூவான் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

நுண்ணீர் பாசனம் (RKVY - PDMC) என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரீய தொழில் நுட்ப முறையாகும். குறைந்த நீரை கொண்டு அதிகப்பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

அதற்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டு திறன் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கிறது. மகசூல் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இத்தொழில்நுட்பம் மூலம் உரங்களையும் பாசனநீர் வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உரப் பயன்பாடு 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் பாசனநீர் சிக்கனமாக பயன் படுத்தப்படுவதோடு உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் வேளாண் பயிர்களான தென்னை, கரும்பு பருத்தி எண்ணெயப் பனை, தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும், நிலக்கடலை, எள், உளுந்து, பயறு ஆகிய பயிர்களுக்கு தெளிப்பு நீர்ப்பாசனம் (அல்லது) மழை தூவான் அமைத்துக் கொள்ளலாம்.

பாசன அமைப்புக்கு 75 முதல் 100 சதவீத மானியம்:

இந்த திட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், மழை தூவான் பாசனம் போன்ற வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

இது போன்ற 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதி பங்கு தொகையை இணையவழி மூலமாக தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீர் பாசன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2, நிலவரை படம், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசனம் அமைக்க பொருள் இலக்காக 350 எக்டேரும், நிதி இலக்காக ரூ.2.75 கோடியும் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது வலைத்தளத்தின் மூலமாகவோ நேரடியாகவோ பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

pic courtesy: village square

மேலும் காண்க:

விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.50க்கு 5 பழக்கன்று தொகுப்பு!

English Summary: Subsidy for Drip, Rain Sprinkler Irrigation System for Kancheepuram farmers
Published on: 27 June 2023, 01:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now