பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 March, 2022 3:49 PM IST
Thallikku Thangam Scheme

எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.

நம் நாட்டு விளிம்புநிலைப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் அணிகலனோ, ஆடம்பரமோ, பகட்டோ அல்ல. அது ஒரு கேடயம். எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.

இந்த உளவியலை உணர்ந்துதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989-ல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாலிக்குத் தங்கம் என்னும் முறையை அறிமுகப்படுத்தி, 4 கிராம் தங்கத்தை வழங்க ஆரம்பித்தார். 2016-ல் மீண்டும் முதலமைச்சரானபோது 8 கிராம் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த சூழலில், முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ், திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதற்காக 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களுக்கும் 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைந்தனர்.

இந்த சூழலில், 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். 'என்று அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

5 திருமண நிதியுதவித் திட்டங்கள்:-

தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

*அவை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்.
* ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம்.
* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்.
* அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்.
* டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகியவை.

இதில் முதல் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் பொதுப் பிரிவினருக்கானது. பிற திட்டங்கள் கலப்புத் திருமணம், மறுமணம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கானவை. இதில் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தில்தான், பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம். இது நிறுத்தப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரு பவுன் தங்கம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். எனினும் பயனாளிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-21ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்தனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்கள் என்பதன்மூலமே இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தைத் தொட்டுள்ள நிலையில், பெரும்பான்மை மக்களுக்கான தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றப்படுவது விளிம்புநிலைப் பெண்களுக்குத் தங்கம் என்பதையே கனவாக மாற்றிவிடும்.

இந்த சூழலில், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகள் சிலரிடம் பேசினேன்.

மேலும் படிக்க..

மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!

English Summary: Thalikku Thangam Scheme: Are the Shields of Poor Women getting lost? is it unnecessary or Not?
Published on: 22 March 2022, 12:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now