பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 August, 2023 4:52 PM IST
Unified Single License is Compulsory in e-NAM Scheme

பயறு தரம் பிரிக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் மற்றும் விளைப்பொருட்களை பாதுகாக்க குளிர்பதனங்கிடங்கு போன்றவற்றை குறைந்த வாடகையில் வழங்கப்படுவதாக விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வியாபாரிகள் ஒற்றை உரிமம் பெற வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் இப்பகுதியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

பயறு தரம் பிரிக்கும் இயந்திரம்:

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள பயறு தரம் பிரிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் குவிண்டாலுக்கு 200 ரூபாய் வீதமும், வியாபாரிகள் குவிண்டாலுக்கு 250 ரூபாய் வீதமும், வாடகையில் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் காய் ஒன்றுக்கு 50 பைசா வீதமும், வியாபாரிகள் காய் ஒன்றுக்கு 60 பைசா வீதமும், வாடகையில் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வியந்திரங்களை பயன்படுத்திட விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்கண்ணிப்பாளரை 04562- 245038, 9003753160 என்ற எண்ணிற்கும் மற்றும் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்கண்ணிப்பாளரை 04563-222615, 9952341770 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒற்றை உரிமம் சான்று ஏன்?

விருதுநகர் விற்பனைகுழுவின் கீழ் செயல்படும் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் e-NAM திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விற்பனைக்குழுவின் மொத்த வியாபார உரிமம் பெற்ற வணிகர்கள் e-NAM திட்டத்தின் மூலம் மின்னணு வர்த்தகத்தில் பங்கேற்கவும், தமிழ்நாடு முழுவதும் Inter-Mandi மற்றும் Inter-State வணிகம் மேற்கொள்ளவும், ஒற்றை உரிமம்(Unified Single License) பெற்று இருக்க வேண்டும்.

ஒற்றை உரிமம் பெற, படிவம் 1 A ன்-படி விண்ணப்பத்தினை - கடனுதவி சான்றிதழ் (Solvency Certificate),வங்கி உத்தரவாதம் (Bank Guarantee),வங்கி கணக்கு விவரம் (Bank Details),PAN Details, GST Registration Details, Address Proof, ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட விற்பனைக்கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை விற்பனைக்கூடங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒற்றை உரிமம் பெற்று இருந்தால் மட்டுமே e-NAM திட்டத்தின் கீழ் மின்னணு ஏல முறையில் பங்குபெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வாடகையில் குளிர்பதனக் கிட்டங்கி :

விருதுநகர் விற்பனைகுழுவின் கீழ் செயல்படும் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிட்டங்கியும், ராஜபாளையம், மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிட்டங்கிகளும் உள்ளன.

25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிட்டங்கி மாத வாடகை ரூபாய் 4800 வீதமும் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிட்டங்கி மாத வாடகை ரூபாய் 12000 வீதத்தில் 11 மாதங்களுக்கு குத்தகையின் அடிப்படையில் 6 மாத வாடகை தொகை முன்பணமாக பெற்று வாடகைக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களது விளைபொருட்களை மாத வாடகையிலோ அல்லது விளைபொருளுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்ட தினசரி வாடகையிலோ குளிர்பதன கிட்டங்கியில் இருப்பு வைத்து பயன்பெற சம்மந்தப்பட்ட விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

சண்டேவாது லீவாது- 13 மாவட்டங்களில் இன்று பேய் மழைக்கு வாய்ப்பு

திருச்சி மாவட்ட கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு !

English Summary: Unified Single License is Compulsory in e-NAM Scheme
Published on: 27 August 2023, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now