State

Saturday, 01 July 2023 03:53 PM , by: Muthukrishnan Murugan

Women Self Help Groups can apply to set up Millet Cafe

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகிற 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்தியா முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் (Millet Cafe) அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

சிறுதானிய உணவகம் அமைக்க நிபந்தனைகள் என்ன?

தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் (SHG) மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள்(SHG), உற்பத்தியாளர் குழுக்கள்(PG) கூட்டமைப்புகள் (PLF) ஆகியவற்றிடம் இருந்து விண்ணாப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
  • தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் (NRLM Portal) -லில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.
  • கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "A" அல்லது " B" சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
  • மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை சமர்பிப்பது எப்படி?

சிறுதானிய உணவகம் அமைக்க ஆர்வமுடையவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 03.07.2023 தேதி அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

சிறுதானிய உணவகம் அமைக்க விருப்பம் இருப்பின், அதுத்தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9597736268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

சிலிண்டர் விலை உயர்வு முதல் வங்கி விதிகள் மாற்றம் வரை- ஜூலை முதல் நாளே இப்படியா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)