மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 January, 2022 8:48 AM IST

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதை பிசிஆர் பரிசோதனைகள் உறுதி செய்யும் பட்சத்தில், அந்த நபர் 10 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்திக் கொள்வது போதாது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொடூரக் கொரோனா (Cruel corona)

பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது தொடர்பாக பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதிக நாட்கள் வாழும் வைரஸ் (A virus that lives for many days)

அந்த ஆய்வின்படி, பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, ஆர்என்ஏ அடிப்படையில் ஒரு புதிய வகை பரிசோதனை செய்ததில், சில நோயாளிகளுக்கு தொற்று குறிப்பிட்ட காலத்தை தாண்டி நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. அது, நிலையான 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை விட அதிகமாக இருந்தது.

அதாவது, 10 நாட்களுக்குப் பிறகு, 13 சதவீத நபர்களின் உடலில் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருந்தது தெரியவந்துள்ளது.

68 நாட்கள் வரை (Up to 68 days)

இது, அவர்கள் இன்னும் நோய்த்தொற்றுடன் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சிலருக்கு 68 நாட்கள் வரை இந்த நிலை நீடித்திருக்கிறது.

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற எக்ஸிடர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறுகையில், ‘இது ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வாக இருந்தாலும், உயிர்ப்புடன் உள்ள வைரஸ் சில சமயங்களில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கலாம். கூடுதலாகத் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றார்.

10 நாட்கள் போதாது

எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என்று இந்த ஆய்வு முடிவு அறிவுறுத்துகிறது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: 10 days of isolation is not enough - information in a new study!
Published on: 18 January 2022, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now