பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 February, 2022 11:42 AM IST

உணவில் மணத்தைக் கூட்டித்தரும் பல பொருட்கள், உடலுக்கும் நன்மை பயக்கின்றன. அந்த வகையில், தென்னிந்திய சமையலில் கட்டாயம் இடம்பெறும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றால் பல நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.

இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது.அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

நிவாரணம்

மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல குணங்கள் நிறைந்தது.

கிராம்புகளில் யூஜெனால் என்ற தனிமம் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி போன்ற பிரச்சனைகள் சீராகிறது.மேலும், கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன.

எப்போது சாப்பிடுவது?

பொதுவாக, கிராம்பு எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது.

எப்படி சாப்பிடுவது?

கிராம்பின் முழு நன்மையைப் பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

கிராம்பு ஹாட் வாட்டர்

  • கிராம்புகளை இரவில் உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

  • கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய வைக்கிறது.

  • கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட்டும் உள்ளது.

  • பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீக்க உதவுகிறது. மேலும், பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.

  • கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

  • இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

  • கை, கால் நடுங்கும் பிரச்சனை இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் தெரியும்.

  • நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்வது நல்லப் பலன் அளிக்கும். 

  • சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

உடனே உங்கள் எடைக் குறையும்- இதுதான் அந்த மந்திரம்!

English Summary: 2 cloves + Hot water before going to bed at night- Amazing benefits!
Published on: 28 February 2022, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now