நம் உடலில் செரிமாணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, பலவித நோய்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும். ஏனெனில்தான் செரிமாணப் பிரச்னைதான், பல சிக்கல்களுக்கு அடித்தளம்.
அவ்வாறு செரிமானக் கோளாறுகளைச் சரிப்படுத்தும் வெற்றிலை கசாயத்தின் மருத்துவப் பண்புகள் அபாரமானவை. தலை முதல் கால் வரை சீராக்கும் வெற்றிலைச் சாற்றின் பயன்கள் ஏராளம்.
பாரம்பரியம்
பொதுவாக இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்தியம் மூலமே நோய்களை குணமாக்கிக் கொள்வதும், நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும் பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கும் பழக்கம்.
புத்துணர்ச்சி
இயல்பாக வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களே நமது ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் பாதுகாக்க உதவுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றிலையை தினசரி உணவுக்கு பிறகு பயன்படுத்துவதால், வாயில் புத்துணர்ச்சி உண்டாகி, துர்நாற்றம் அகலும்.
புற்றுநோய்
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு என்பதால், தினசரி தாம்பூலமாக வெற்றிலையை உண்பது நல்லது.
தாம்பத்தய உறவை மேம்படுத்த, ஆஸ்துமா, காசநோய்கள் இருந்தால் அவற்றை நீக்க மற்றும் செரிமாணக் கோளாறுகளை போக்க என பல்வேறு காரணங்களுக்காக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.வெற்றிலையை, துளசி மற்றும் கற்பூரவல்லி இலைகளுடன் சேர்த்து தேநீராக்கிக் குடித்தால், சளித்தொல்லை நீங்கும்.
கால்சியம்
முக்கியமாக, வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து தினசரி உணவுக்கு பிறகு உண்பதால், உடலில் இரத்த குறைபாடு நீங்கும், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும்.
மேலும் படிக்க...