Health & Lifestyle

Tuesday, 07 December 2021 10:15 AM , by: Elavarse Sivakumar

உலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரான், இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 3 - வது அலையாக உருவெடுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சத்தில் உலக நாடுகள் (The nations of the world in fear)

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் நாடு தீவிரமாக உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு, இறப்பு, மருத்துவமனை அனுமதி என எல்லாமே கட்டுக்குள் இருக்கிறது. தடுப்பூசி திட்டமும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முந்தையக் கணிப்பு

முன்னதாக கொரோனா உருமாறிய தொற்று 3-வது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி 3-வது அலை தாக்கவில்லை.

இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ், உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

மீண்டும் கணிப்பு (Re-prediction)

இதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

  • இப்போதைய கணிப்புப்படி தற்போதைய புதிய வைரசுடன் வருகிற (2022) பிப்ரவரிக்குள் 3-வது அலை உச்சத்தை எட்டும்.

  • அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2-வது அலையை விட மிதமானதாகவே இருக்கும்.

  • தற்போதைய புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையைக் கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை.

  • இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

அதிகரிப்பு இல்லை (No increase)

தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவில்லை.ஆனால் அங்குத் தொற்று பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்குத் தெளிவான பிம்பத்தை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: WHO ஆறுதல் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)