Health & Lifestyle

Monday, 01 August 2022 10:47 AM , by: Elavarse Sivakumar

கருவேப்பிலை என்பதைப் பொறுத்தவரை, சமையலுக்குப் போட்டுவிட்டுத் தூக்கி எறியும் ஒன்று என்பதுதான் நமக்குத் தெரிந்தது. உண்மையில், இது ஒரு மூலிகை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டால் பல நன்மைகளை நாம் பெற முடியும்.

ஊட்டச்சத்து

பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, காப்பர், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது, உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே தினமும் அதிகாலையில் 3 முதல் 4 பச்சை கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் பல நன்மைகளைப் பெற முடியும்.

கண் கோளாறு

கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

சர்க்கரை

ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

மலச்சிக்கல்

செரிமானத்திற்குக் கருவேப்பில்லை பெரிதும் உதவியாக இருக்கும். இதன் காரணமாக, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும்.

நோய்த் தொற்று

இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் 3 முதல் 4 கருவேப்பிலையை மென்றுத் தின்பதை வழக்கமாக்கிக்கொண்டு, நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)