ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவினை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. காலை உணவு உங்களின் வளர்சிதை மாற்றத்தை உந்தித் தள்ளுவதுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
காலை உணவைத் தவிர்ப்பது உடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் எழுந்தவுடன் உங்களின் தசைகள் மற்றும் மூளை சிறப்பாகச் செயல்பட இரத்தத்தில் சர்க்கரை அளவு இருப்பது அவசியது. பொதுவாக காலை உணவு அதை நிரப்ப உதவுகிறது, எனவே சிலவற்றின் பட்டியலை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஆரோக்கியமான காலை உணவுகள் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கும் உதவும்.
எடையைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான காலை உணவுகள்;
முட்டை:
டீக்கின் யுனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஃபார் பிசிகல் ஆக்டிவிட்டி மற்றும் நியூட்ரிஷன் ஆய்வின்படி முட்டைகள் ஆரோக்கியமான காலை உணவு விருப்பங்களில் ஒன்றாகும். முட்டைகளை தவறாமல் உட்கொள்வது உடலின் வைட்டமின் டி அளவை பராமரிக்க உதவும். காய்ச்சல் அல்லது ஜலதோஷம் போன்ற குளிர்கால நோய்கள் போன்ற தருணங்களிலும் உடல் சக்திக்காக உட்கொள்வது நன்மை தரும்.
வாழைப்பழங்கள்:
வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவற்றின் வளமான மூலமாகும். இது உங்கள் காலை உணவின் மற்ற சர்க்கரை பொருட்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. ஹெல்த்லைன் படி ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது மேலும் 3 கிராம் வரை நார்சத்தும் உள்ளது. தினசரி உடலுக்குத் தேவையான நார்ச்சத்தில் 12 சதவீதம் வரை ஒரே வாழைப்பழத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.
தயிர்:
தயிர் போன்ற புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் காணப்படுகின்றன மற்றும் குடல் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் போது இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கலாம்.
ஸ்மூத்திகள்:
ஸ்மூத்திகள் ஆரோக்கியமான காலை உணவு விருப்பமாகக் கருதப்படுகிறது, காலை உணவில் ஸ்மூத்திகள் சேர்க்கப்படும்போது, ஸ்மூத்திகள் உங்களை திருப்தியடையச் செய்யலாம் மற்றும் ஒருநாளுக்கான முழுமையின் உணர்வை ஊக்குவிக்க வழிவகுக்கும்.
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை தகவல் உடல் நலனை மேம்படுத்தும் விதமாக திரட்டப்பட்ட தகவல்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ தகவல்களை பெற உங்களது மருத்துவரிடம் கலந்தலோசிக்கலாம்.
மேலும் காண்க:
ஷெனாய் நகரில் இனி கூட்டம் அள்ளும்.. புத்துயிர் பெற்ற இந்த பூங்காவினால் தான்!