Health & Lifestyle

Tuesday, 07 May 2019 05:48 PM

Credit : Exporters India

கோவக்காயை நீங்கள் உணவாகத்தான் உட்கொண்டிருப்பீர்கள், இதே கோவக்காயை (coccinia grandis) மருந்தாக பயன் படுத்தியது உண்டா? வாருங்கள் பார்க்கலாம் கோவக்காயின் மருத்துவ குணங்கள்:

கோவக்காயின் மருத்துவ குணங்கள்:

சொரியாசிஸ் (Psoriasis), படை, சிரங்கு, தேம்பல், முடி உதிர்வு (Hair loss), பொடுகு,பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய் (diabetes), சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை,  சிறுநீரகத்தில் கல் (Kidney stone), கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும், இந்த கோவக்காய், குணமாக்குகிறது.

தோல் நோய்:

இதில் இந்த  சொரியாசிஸ் (Psoriasis), படை, சிரங்கு, தேம்பல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேலை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும் இந்த கோவக்காய் ஜூஸ் (coccinia grandis Juice) குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.

தலை முடி:

தலையில் பொடுகு , முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலுமிச்சை (Lemon) பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.

Credit : Exporters India

பல்:

பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் (coccinia grandis Juice) குறைகிறது.

தொப்பை:

சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரி செய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோயால் (Diebetes) சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

Credit : Exporters India

சிறுநீரகத்தில் கல்:

சிறுநீரகத்தில் கல் இருந்தால் (Kidney Stone) இதற்கு கோவக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும். 

கெட்ட கழிவுகள்:

உடலுள் சேரும் கேட்ட கழிவுகளை கோவக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம்  சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும். கோவக்காய் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது. 

Credit : Exporters India

மேலும் படிக்க

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)