நம் உடலை முடிந்த அளவு பராமரிக்க நம்மக்கு தெரிந்த முறைகளை பயன்படுத்துகிறோம். சில முறைகள், ஆயுர்வேதமாக இருக்கும் சில முறைகள் கெமிக்கல் சேர்ந்தவையாக. எதுவாக இருந்தாலும் அளவாக பயன் படுத்தினால் உடலுக்கு நல்லது.
வாருங்கள் இந்த வைட்டமின் "இ" மருந்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முகப்பரு, கண் கருமை: வைட்டமின் "இ" ல் உள்ள ஜெல்லை பருக்கள் மீது, கண்களுக்கு கீழ் கருமையான பகுதியில் தடிவினால் முகப்பரு, கண் கருமை, நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
தலைமுடி வெடிப்பு: வைட்டமின் "இ" ல் உள்ள ஜெல்லை எண்ணையில் கலந்து தடவினால் தலை முடி வெடிப்பு குறைந்து நீளமாக வளர தொடங்கிவிடும்.
பாத வெடிப்பு : கிலிஸரின் , வாசலின் மற்றும் இந்த வைட்டமின் "இ" மூன்றையும் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் மிக விரைவில் பாத வெடிப்பு சரியாகிவிடும்.
நகங்களுக்கு: வைட்டமின் "இ" ஜெல்லை நேரடியாக கை, கால் நகங்களில் தடவினால் அடிக்கடி உடைவது, நகத்தில் அழுக்கு, நகத்தை சுற்றி கருமை அனைத்தும் நீங்கிவிடும்.
சருமத்தில் வெப்ப எரிச்சல்: சருமத்தில் உண்டாகும் வெப்ப எரிச்சல், இதற்க்கு நீங்கள் உடலுக்கு பயன்படுத்தும் கிரீமில் இந்த வைட்டமின் "இ" ஜெல்லை சேர்த்து தடவி வந்தால் எரிச்சல் அடங்கி நல்ல ஆறுதல் கிடைக்கும்.
உதடுகள்: சிலருக்கு உதடு வறட்சியாக இருக்கும், சிலருக்கு வெடித்திருக்கும், இந்த வைட்டமின் "இ" ஜெல்லை நேரடியாக அல்லது பாதாம் எண்ணையில் கலந்து தடவினால் வறட்சி , வெடிப்பு, நீங்கி மென்மையான மற்றும் அழகான உதடுகள் பெறலாம்.
தலை முடி வளர: சிறிது நீங்கள் பயன்படுத்தும் என்னை, சிறிது வெளக்கெண்ணெய், மற்றும் வைட்டமின் "இ" மூன்றையும் கலந்து தலை வேர்களில் நன்கு தடவி மசாஜ் குடுக்க வேண்டும். பின் இரவில் தடவி வைத்துவிட்டு காலையில் குளிக்கலாம் அல்லது காலையில் தடவினால் முடிந்த அளவு இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனால் தலை முடி வேகமாகவும் நீளமாகவும் வளரும்.