தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மூடப்பட்டப் பள்ளிகள் (Closed schools)
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை ஒட்டி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்று.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தான் திறக்கப்பட்டன.
தேர்வு இல்லை (No Exam)
அதிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க முடியாத சூழலில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாடங்கள் நடத்திமுடிக்கப்படாததால், காரணமாக அரையாண்டுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற வில்லை.
9 நாள் விடுமுறை (9 day holiday)
ஆனாலும் தேர்வு இல்லாததால், விடுமுறை விடப்படுமா என்றக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட ஏதுவாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதாவது டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு சம்பந்தமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததால், மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது.
சுழற்சிவகுப்புகள் ரத்து (Cancel rotation class)
மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறை வகுப்புகள் இன்றி வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில்,10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க...
3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை!
கடற்கரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!