Health & Lifestyle

Sunday, 08 May 2022 06:15 PM , by: Elavarse Sivakumar

முந்திரி என்றவுடன் அது உடல் எடையை அதிகரிக்கும், பணக்காரர்கள் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் விலை. இப்படி பல எதிர்மறை விஷயங்களே நம் மனதிற்கு வரும். ஏனெனில், இவற்றைத் தான் நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் முந்திரியைச் சாப்பிடுவதால், உடல் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியம்.

முந்திரி என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முந்திரி அனைவருக்கும் கவர்ந்த ஒன்று. முந்திரியை அப்படியே சாப்பிடலாம், ஊறவைத்தும் சாப்பிடலாம்.ஊறவைத்த முந்திரி எளிதில் ஜீரணமாகும். இதனால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால்தான் ஊறவைத்த முந்திரியை எப்போதும் சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவ நன்மைகள் (Medicinal benefits)

ஜீரணம்

முந்திரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.முந்திரியில் ஃபைடிக் அமிலம் காணப்படுகிறது. இது அனைவருக்கும் ஜீரணிக்க எளிதான ஒன்றாகும். முந்திரியை ஊறவைத்த பிறகு உட்கொள்ளும் போது, ​​அதிலிருந்து பைடிக் அமிலம் வெளியேறி, அது எளிதில் ஜீரணமாகும்.

ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க

முந்திரியில் இடம்பெற்றுள்ள பைடிக் அமிலம் உடலில் உள்ள தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பொதுவாக அனைவரது உடலிலும் சில தாதுக்களின் குறைபாடு இருக்கலாம். முந்திரியை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இந்தக் குறைபாடுகளைப் போக்கலாம்.

எடையைக் குறைக்க

முந்திரி ஹார்மோனுக்கு உதவிப் பசியைக் கட்டுப்படுத்தும், ஆகையால் தேவையற்ற உணவை சாப்பிடாமல் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஊறவைத்த பீன்களில் கலோரிகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசியைக் குறைக்கும். அதே நேரத்தில், நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சரிசெய்கிறது. மேலும் எடை இழப்புக்கும் இது உதவுகிறது. இதுமட்டுமல்ல, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் முந்திரி பெரிதும் உதவுகிறது. ஊறவைத்த முந்திரியை உண்ணும்போது, ​​கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.

முந்திரி பருப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது தவிர, முந்திரியில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனுடன் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க...

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் அணியாததற்காக ரூ.500 அபராதம்!

அடுத்த வாரம் அசானி புயல்- வங்கக்கடலில் உருவாகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)