தேங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி அதிகளவில் காணப்படுவதால், இந்த வைரஸ் தொற்று அதிகம் உள்ள காலங்களில், தவறாமல் எடுத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக் கொள்ளக் கைகொடுக்கும்.
துண்டுத் தேங்காய் (Slice coconut
பொதுவாக கோவில்களில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைப்பது வழக்கம். வீடுகளில் பூஜைகளிலும் தேங்காய் உடைக்கப்படும். அவ்வாறு உடைக்கப்படும் தேங்காயை பிரசாதம் எனக் கூறி, துண்டு போட்டு சாப்பிடுவது வழக்கம்.
உண்மையில் இந்த பழக்கம், நம் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மை செய்கிறது.
இதுத் தவிர தேங்காய், உணவில் சட்னி, சாம்பார் தேங்காய் சாதம் உள்ளிட்ட பல வகையில் பயன்படுகிறது. ஆனால் இந்த தேங்காயில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல வகை நன்மைகள் அடங்கியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி (immunity)
இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் முக்கியமான ஒன்று தேங்காய். உடலில் ஆரோக்கிமான கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்களின் சிறந்த மூலமாக தேங்காய் பயன்படுகிறது. இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் பாரம்பரிய மருத்துவத்தில் தேங்காய் பயன்படுத்தப்படும் நீண்ட வரலாறும் உள்ளது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அதிகம் காணப்படுகின்றன.
இந்த தேங்காய் எவ்வாறு ஆரோக்கிய விளைவுகளை அதிகரிக்கிறது என்றால், அதேபோல் தினமும் தூங்கும் முன் ஒரு துண்டுப் பச்சையாக தேங்காய் துண்டைச் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது.
மலச்சிக்கல் (Constipation)
பச்சை தேங்காய் மலச்சிக்கலை தடுக்க உதவும் ஒரு இயற்கை தீர்வாகும். பச்சை தேங்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம் (Heart health)
தேங்காயில் உள்ள கொழுப்பு உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும். இதன் மூலம், தேங்காய் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும்.
உடல் எடை (body weight)
பச்சை தேங்காய் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாகும், இது உங்கள் உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான தோல்
பருக்கள் அல்லது தழும்புகள் போன்ற பல தோல் பிரச்சனைகளை தீர்க்க தேங்காய் நன்மை பயக்கும். சிறந்த பலனைப் பெற, படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பச்சையாக உட்கொள்ளவும்.
தூக்கத்திற்கு (For sleep)
இன்றைய வேகமான வாழ்க்கையின் காரணமாக, தூக்கமின்மை பிரச்சனை பொதுவானதாகிவிட்டது. தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
மேலும் படிக்க...
வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?