மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 September, 2022 9:50 PM IST

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடியும்.

நெய் என்ற உடனேயே, அது கொழுப்பாச்சோ என்று மற்றவர்கள் கூறுவதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உண்மை அதுவல்ல. நெய் ஒரு பழமையான அதிசய மருந்து, இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தினமும் அதிகாலையில் ஒரு சிறிய அளவிலான நெய் உட்கொள்வது, மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்யும் என்று ஆயுர்வேத வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

உயிரணுக்களுக்கு ஊட்டம்

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் நெய் உட்கொள்வது, உடலின் உயிரணுக்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது மற்றும் செல் சேதத்தை மாற்றியமைக்க உதவுகிறது, குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

கெட்டக் கொழுப்பு வெளியேறும்

நெய்யில் பியூட்ரிக் அமிலம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருப்பதால், பிடிவாதமான கொழுப்பை உடல் அமைப்பிலிருந்து வெளியேற்றி, நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது.

இதய ஆரோக்கியம்

இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், பலன்களைப் பெறுவதற்கு மிகக் குறைந்த அளவில் இதை உட்கொள்வது அவசியம், அதிகளவு நெய்யில், நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

நச்சுக்களை வெளியேற்றும்

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது அதிகாலையில் ஒரு மருந்தாக உட்கொள்ளும்போது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது, உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது.
செரிமான செயல்பாட்டின் போது சிறுகுடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதற்கு அதிகாலையில் ஒரு சிறிய அளவு நெய் சிறந்தது.

மலமிளக்கி

நெய் இரைப்பைக் குழாயின் அமில pH அளவைக் குறைக்கிறது என்று நம்பப்படுகிறது. சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலை பானத்தில் நெய்யைச் சேர்ப்பது அல்லது மஞ்சளுடன், நெய் சேர்த்து சாப்பிடுவது ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

சாப்பிடுவது எப்படி?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு டீஸ்பூன் நெய்யை, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்வது உடலுக்கு ஒரு டானிக் போல வேலை செய்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும், இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை மஞ்சளுடன், நெய் சேர்த்து சாப்பிடும் போது, இது ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமாக அமைகிறது. இது ஒரு வைரஸ் தடுப்பு கலவையாகவும் செயல்படுகிறது, இது தொண்டை புண், சளி இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது. இருப்பினும், தினசரி உணவில் எதையும் சேர்ப்பதற்கு முன், மருத்துவ வழிகாட்டுதலைப் பெற அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால், மிதமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: A teaspoon of ghee when you wake up in the morning!
Published on: 22 September 2022, 09:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now